போட்டி தேர்வை வெற்றி கரமாக படியுங்க தேர்வை வெல்லுங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளின் தரம் நாளுக்கு நாள்   குரூப் தேர்வுகளுக்கு ஏற்ப மாறுபட்டு வருகின்றது. தரமான படிப்பு மற்றும் சிறப்பான உங்கள் முயற்சியை கொடுக்கவும் தேர்வை எளிதாக வெற்றி பெற சுமார்ட் ஒர்க்குகள் எப்படி கொடுக்கலாம் என்பதை தெரிந்து கொண்டால் நீங்கள் ஒரு சிறந்த வெற்றியாளராக வலம் வரலாம். டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கும் படிக்கும் நீங்கள் எதை செய்யலாம் எதையெல்லாம் செய்ய கூடாது என்பதை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். 

 

1. முத்ரா திட்டம் யாரை நோக்கமாக கொண்டு செயல்படுகின்றது

1 முத்ரா யோஜனா இளைஞர்களுக்காக
2 அனைவருக்கும் கடன் வழங்க
3 தொழில் வல்லுநர்க்கு கடன் வழங்க
விடை: 1 முத்ரா யோஜனா இளைஞர்களுக்காக
விளக்கம்
:
முத்ரா யோஜ்னாவின் கீழ் வேலை வாய்ப்பு கொடுக்கும் எண்ணத்துடன் உள்ள இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு உருவாக்கி தொழில் புரிய ஆவல் கொண்டவர்களுக்கு கடன் உதவி வழங்கும் எண்ணத்துடன் உருகாக்கப்பட்டது. 1 கோடி இளைஞர்கள் கர்நாடாகாவில் மட்டும் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர்.

2. இளைஞர்களுக்கான புதிய இந்தியா என்ற தொலை நோக்கு பார்வையில் இந்திய அரசு கொண்டு வரும் புதுமை எது?

1 கல்வியில் சீர்திருத்தம்
2 தொழில் சீர்த்திருத்தம்
3 வேலை வாய்ப்பு உருவாக்க்குதல்
விடை: 1 கல்வியில் சீர்திருத்தம்
விளக்கம்
:
கல்வியில் சீர்த்திருத்தம் கொண்டு வந்து இளைஞர்களுக்கான தொலைநோக்குப் பார்வையை செலுத்தி கல்வியில் சீர்த்திருத்தம் அத்துடன், அடிப்படை கட்டமைப்பில் சீர்த்திருத்தப்பட்ட கல்வியை கொண்டு வருதல், அடல் திட்டத்தின் கீழ் இளைஞர்களை புதிய தொடக்கத்தை கொண்டுவருதல் இதன் முக்கிய செயல்பாடுகள் ஆகும்.

3. புவிசார்ந்த குறியீட்டை பெற புதிதாக விண்ணப்பித்துள்ள அமைப்பு எது ?

1. விசாகப்பட்டிண அரகு பள்ளதாக்கு காப்பி
2. பாய்க்கான புவிசார் குறியீடு
3. மஞ்சளுக்கான புவிசார் குறியீடு
விடை: 1 விசாகப்பட்டிண அரகு பள்ளதாக்கு காப்பி
விளக்கம்
:
ஆந்திர பிரதேசத்தின் மலைவாழ் மக்களால் அரகு பள்ளதாக்கில் பயிர்செய்யப்படும் காப்பிக்கான புவிசார்ந்த குறியீடு பெற காப்பி போர்டு விண்ணப்பித்துள்ளது.

ஒருங்கிணைந்த காப்பி வளர்ச்சி திட்டத்தினகீழ் நிதி ஆதரவு மற்றும் நீர் பாசனம், காப்பி பயிரிடுதலுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தலாம்.

 

4. நாரி என்னும் இணைய வாயிலின் நோக்கம் என்ன

1 பெண்களுக்கான அரசின் திட்டங்கள், மற்றும் முன்னெடுப்புகள் பற்றிய தகவல்கள் கிடைக்க இணையவாயில் தொடன்ங்கப்பட்டுள்ளது.
2 இளைஞர்களுக்கான தகவல்கள் கிடைக்க இது அமைக்கப்பட்டது
3 பாதுகாப்புக்காக இது உருவாக்கப்பட்டது

விடை: 1 பெண்களுக்கான அரசின் திட்டங்கள், மற்றும் முன்னெடுப்புகள் பற்றிய தகவல்கள் கிடைக்க இணையவாயில் தொடன்ங்கப்பட்டுள்ளது.

விளக்கம்: பெண்கள் வாழ்க்கை பாதிக்கும் விஷயங்களை பற்றிய தகவல்களிய பெண்களுக்கு கொடுக்க நாரி என்ற இணைய வாயிலை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் துவங்கியுள்ளது. பெண்கள் எளிதாக இந்த திட்டத்தின் மூலம் குறிப்பிடத்தகு திட்டங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை மேற்கொள்ளவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ளவும் முடியும்.

 

5. ஜல் மார்க் விகாஷ் திட்டம் என்றால் என்ன?

1. முதல் தேசிய நீர்வழிப்பாதை
2. முதல் கடல்வழி பாதை
3. சாலை சுரங்க பாதை உருவாக்கம்

விடை: 1. முதல் தேசிய நீர்வழிப்பாதை
விளக்கம்:  நாட்டின் முதல் தேசிய நீர்வழிப்பாதையின் மீதான வழிகாட்டு அமைப்பின் திறனை பெருக்குவதற்காக ஏற்படுத்தப்பட்டதே ஜல் மார்க் விகாஸ் திட்டம் ஆகும். கங்கா- பாகிரதி- பீகார்- ஜார்காண்ட் மேற்கு வங்காளம், போன்ற மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. உலக வங்கியின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் இந்த திட்டம் செய்லப்படுத்தப்படவுள்ளது.

 

6. இந்தியாவில் எத்தனைவகை தத்துவ பள்ளிகள் உள்ளன?

1. ஏழு
2. ஆறு
3. மூன்று
விடை: 2. ஆறு
விளக்கம்:
இந்தியாவில் மொத்தம் ஆறுவகை தத்துவபள்ளிகள் உள்ளன. அவை சாத்- தர்ஷனா எனப்படும். அவை பழங்காலத்திலிருந்து 6 தத்துவ ஞானிகளை கொண்டது. நியாயா, வைஷ்க்ஷா தர்ஷ்ணா, கன்க்ஷா, யோகா தர்ஷ்ணா, உத்திரமீமான்ஷா போன்ற தத்துவங்களை கொண்டது.

7. தமிழகத்திலுள்ள சதுப்பு நிலங்கள் என்னென்ன?

1 சென்னையில் பள்ளிகரணை, கடலூரில் பிச்சாவரம்
2 வேத்ராண்யம்
3 கன்னியா குமரி
விடை: 1 சென்னையில் பள்ளிகரணை, கடலூரில் பிச்சாவரம்
விளக்கம்:
இந்தியாவின் மேற்கு வங்கம் முதல் வங்காள தேசத்திற்கு இடைப்பட்ட புதியில் அமைந்த கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் உள்ள நீர் செறிவுமிக்க பகுதி இதுவாகும் பெரும்பாலும் ஈரப்பதமாகவே இருக்கும்.

8. மூடப்பட்ட திரவத்தின் மீது செலுத்தப்படும் வெளி விசையின் அழுத்தம் திரவத்தின் அனைத்து பகுதிக்கும் சமமாக கடத்தப்படுவது?

1. பாகியல் விதி
2. பாயில் விதி
3.  பாஸ்கல் விதி
விடை: 3 பாஸ்கல் விதி
விளக்கம்
:
திரவத்தின் மீது செலுத்தப்படும் விசையின் அழுத்தம் திரவத்தின் அனைத்து பகுதிக்கும் சமமாக கடத்தப்படும் அதனையே பாஸ்கல் விதி என்கிறோம்.

9. 21 வது கால்பந்து கோப்பை எங்கு நடைபெறுகின்றது?

1 ரஷ்யா
2 சீனா
3 பிரான்ஸ்
விடை: ரஷ்யா
விளக்கம்
: கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைபெறுகிறது. 32 நாடுகள் பங்கேற்கும் இப்போட்டியில் உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றிலேயே முதன்முறையாக பனாமா மற்றும் ஐஸ்லாந்து நாடுகள் பங்கேற்க தகுதி பெற்றுள்ளன.

 

 

சார்ந்த பதிவுகள்:

குரூப் தேர்வுகளுக்கான கேள்விகளுக்கான பதில்கள் 

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிங்க

English summary
The article tells about Tnpsc questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia