போட்டி தேர்வுகளுக்கான டிஎன்பிஎஸ்சி கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் வெற்றி பெற பயிற்சி மேற்கொண்டிருக்கும் அனைவருக்குமான பொதுஅறிவு கேள்விகளின் பதிவு நன்றாக படிக்கவும் . போட்டு வைத்த திட்டங்களை வெற்றி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் தொடர்ந்து படிக்க வேண்டும் .

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளின் கேள்விகள் நன்றாக படிக்கவும்

இழந்த இடத்தை பிடித்துவிடலாம் ஆனால் இழந்த காலத்தை மீண்டும் பெற இயலாது ஆகவே நன்றாக படிக்கவும், காலத்தை வீணடிக்க வேண்டாம் வெற்றி பெற காலத்தை முறையாக பயன்படுத்த வேண்டும் . தடைகள் வரும்பொழுது அதனை தாண்ட வேண்டும் .

1 வகைப்பட்டியலில் முறைப்படுத்துதல் ஒன்றுசேர்த்தல் ஆகிய பொருள்களும் வரும் அதன் முழுவிளக்கம் என்ன

விடை: உயிரினங்களை இனம் கண்டறிதல் பெயரிடுதல், மற்றும் வகைப்படுத்துதல், தொடர்புடைய உயிரியலின் பிரிவு வகைப்பட்டியல் என்று அழைக்கப்படுகிறது .

2 ஆயூர்வேத மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்பட்ட பண்டைய கால இந்திய மருத்துவர்

விடை: சாரக்

3 குஸ்குட்டா என்பது என்ன

விடை: ஒரு ஒட்டுண்ணி

4 நெப்பந்தெஸ் மற்றும் டிராஸெரா தாவரங்கள் யாவை

விடை: பூச்சியுண்ணும் தாவரங்கள்

5 குருநானக் என்பவர் யார்

விடை: குருநானக் சீக்கிய மதத்தின் நிறுவனர் பத்து சீக்கிய குருக்களுள் முதல் குரு ஆவார்

6 அவ்வை இல்லம் என்று அழைக்கப்படும் இல்லத்தின் நிறுவனர் யார்

விடை: முத்துலட்சுமி சென்னையில் "அவ்வை இல்லம் "அடையாறு புற்றுநோய் நிறுவனம் போன்றவற்றை நிறுவி சமூகத் தொண்டாற்றியவர்

7 கந்துகுரி வீரேசலிங்கம் யார்

விடை: பெண்கல்வி, விதவை மறுமணத்திற்காக சீர்திருத்த இயக்கத்தை நடத்தியவர்

8 சமரச சன்மார்க்க சங்கம் இயற்றியவர் யார்

விடை: வள்ளலார் என்றழைக்கப்படும் இராமலிங்கர் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் உருவாக்கினார்

9 இந்தியாவின் நைட்டிங்கேல்

விடை: சரோஜினி நாயுடு

10 இந்தியாவின் பங்கபந்து

விடை: முஜிபூர் ரகுமான்

சார்ந்த பதிவுகள்:

போட்டி தேர்வுக்கு உதவும் தமிழ் கேள்வி பதில்கள் !! 

 டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான தமிழ் கேள்வி பதில்கள்

டிஎன்பிஎஸ்சி போட்டி நடப்பு நிகழ்வுகள் !!! 

English summary
here article tell about tnpsc questions bank for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia