பிளஸ் 1 வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு

Posted By: Jayanthi

சென்னை, மார்ச் 3: தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வுகள் 11ம் தேதி தொடங்கி 30ம் தேதி முடிகிறது. இதற்கான அதிகாரப் பூர்வ தேர்வு அட்டவணையை தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட முன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

பிளஸ் 1 வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு 5ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் பிளஸ் 1 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை 11ம் தேதி முதல் நடத்த வேண்டும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. இதன்படி 11ம் தேதி தமிழ் முதல் தாள், 12ம் தேதி தமிழ் இரண்டாம் தாள், 17ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 19ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள், 20ம் தேதி கணினி அறிவியல், அரசியல் அறிவியல், சிறப்பு தமிழ், 24ம் தேதி உயிரியல், தாவரவியல், வணிகவியல், 25ம் தேதி இயற்பியல், பொருளியல், மனையியல், 26ம் தேதி கணக்கு, விலங்கியல், வரலாறு, 30ம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் தேர்வுகள் நடக்கின்றன.

மேற்கண்ட தேர்வுகள் மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடியும்.

English summary
Plus 1 exam time table was released by District Education Officer.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia