உஸ்மேனியா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!!

Posted By:

டெல்லி: தெலங்கானா மாநிலம் ஹைதராபாதிலுள்ள உஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் பொது நுழைவுத் தேர்வு (ஓயுசிஇடி 2016) தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உஸ்மேனியா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ,, எம்.எஸ்சி, எம்.காம், மாஸ்டர் இன் கம்யூனிகேஷன் அண்ட் ஜர்னலிசம், எம்.எல்ஐஎஸ்சி, எம்எஸ்டபிள்யூ, எம்.எட், எம்.பி.எட், பி.எல்ஐஎஸ்சி உள்ளிட்ட படிப்புகளுக்கு ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வை நடத்தி மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

உஸ்மேனியா பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு!!

இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு மே 30-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரூ.450-ஐ கட்டணமாக செலுத்தவேண்டும். ஓசி, ஓபிசி பிரிவினருக்கு இந்தக் கட்டணமாகும். எஸ்சி, எஸ்டி, பிஎச் பிரிவினர் ரூ.350 செலுத்தினால் போது. ஆன்-லைன் மூலமாகவே இந்தக் கட்டணத்தைச் செலுத்தவேண்டும்.

இந்தத் தேர்வு 100 கேள்விகளைக் கொண்டதாக இருக்கும். மொத்தம் 90 நிமிடங்கள் தேர்வுக்கு ஒதுக்கப்படும். ஒரு கேள்விக்கு ஒரு மதிப்பெண் தரப்படும். தேர்வுக்குப் பதிவு செய்ய மே 7 கடைசி நாளாகும். தேர்வு மே 30-ல் நடைபெறும்.

நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க http://www.ouadmissions.com/ என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளவும்.

English summary
The exam dates for the Osmania University Common Entrance Test (OUCET 2016) has been released by the Osmania University, Hyderabad. The OUCET is held every year by Osmania University for admissions into the following programmes: Programmes offered are: Master of Arts (M.A), Master of Science (M.Sc.), Master of Commerce (M.Com), Master in Communication and Journalism (MCJ), Master of Library and Information Science (M.LISc.), Master of Social Work (MSW), Master of Education (M.Ed.), Masters in Physical Education (M.P.Ed.), Bachelor of Library and Information Science (B.LISc.) Candidates interested to apply for OUCET 2016 can read through for information on OUCET exam paper pattern, application procedure, eligibility criteria and important dates.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia