மத்திய அரசின் இளநிலை ஆராய்ச்சி பெறுவதற்கும், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுவதற்கும் நெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். தற்போது இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் என இரு முறைகளாக நெட் தேர்வு நடத்தப்படுவது வழக்கம். இதில், வரும் டிசம்பர் மாதத்திற்கான நெட் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க நேற்று (அக்டோபர் 9) கடைசி நாளாகும்.
இந்நிலையில், நெட் தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தினை நீட்டித்து தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் 15 ஆம் தேதி விண்ணப்பிக்கக் கடைசி நாளாகும். இத்தேர்வு குறித்தான மேலும் விபரங்களை அறிய https://nta.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












