NTA CUET_PG Exam Notifications 2023:பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு...!

பொது நுழைவுத் தேர்வு 2023

நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்கள், அதன் கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில், இளங்கலை மற்றும் முதுகலை கல்லுாரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு 2022-23 ஆம் கல்வி ஆண்டு முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அடுத்தாண்டு ஜூன் 1 முதல் 10 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்.சி.இ.ஆர்.டி., 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடைபெற உள்ளன.

ஜூன் முதல் அல்லது இரண்டு வாரத்தில் தேர்வு நடைபெறும். இந்தத் தேர்வை எழுதவோ, மாணவர் சேர்க்கைக்கோ 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கருத்தில் கொள்ளப்படாது.

கணினி வழியில் 3 மணி நேரம் 50 நிமிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 66 பல்கலைக்கழகங்கள் பங்கேற்கின்றனர்.

மத்திய பல்கலைக்கழக படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு எப்போது?

மூன்று பிரிவுகளில் கேள்விகள்

பொது நுழைவுத் தேர்வு கேள்விகள் மூன்று பிரிவுகளாகக் கேட்கப்படும். முதல் பிரிவில் இரண்டு பகுதிகள் இருக்கும். முதல் பகுதி கட்டாய மொழித் தேர்வாக இருக்கும்.

13 மொழிகளில் தேர்வு

தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, அசாமி, பெங்காலி, பஞ்சாபி, ஒடியா மற்றும் ஆங்கிலம் ஆகிய 13 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். மொழி சார்ந்து வாசிப்புத் திறன், சொல்லகராதி சார்ந்த கேள்விகள், அருஞ்சொல், எதிர்ச்சொல்கள் உள்ளிட்டவை சோதிக்கப்படும்.

இரண்டாவது பகுதியில் கூடுதலாக விருப்ப மொழித் தேர்வையும் தேர்வர்கள் எழுதலாம். ஃப்ரெஞ்ச், ஸ்பானிஷ், ஜெர்மனி, நேபாளி, பெர்ஷியன், இத்தாலியன், அரபி, சிந்தி, காஷ்மீரி, கொங்கணி, போடோ, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தலி, திபெத்தியன், ஜப்பான், ரஷ்யன், சீனம் ஆகிய 19 மொழிகளில் இந்தத் தேர்வை எழுதலாம்.

மத்திய பல்கலைக்கழக படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு எப்போது?

இரண்டாவது பிரிவில் தேர்வர்களின் துறை சார் அறிவு சோதிக்கப்படும். மொத்தமுள்ள 27 துறைகளில் இருந்து தேர்வர்கள் தங்களுக்குப் பிடித்தமான, தேவையான துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதிகபட்சமாக ஒரு தேர்வர் 6 துறைகள் வரை தேர்வு செய்ய முடியும். பல்கலைக்கழகங்களும் துறைசார் தேர்வுகளை நடத்த முடிவு செய்யலாம்.

மூன்றாவது பிரிவில், பொதுவான கேள்விகள் கேட்கப்படும். பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், மனத் திறன், கணக்குத் திறன், தர்க்க மற்றும் பகுத்தறியும் திறன் சார்ந்த கேள்விகளும் கேட்கப்படும்.

தேர்வு குறித்த முழு விவரங்ளுக்கு க்ளிக் ப்ளீஸ்....!

ஆல் தி பெஸ்ட் ஸ்டூடண்ட்ஸ்...!

https://cuet.samarth.ac.in/

https://nta.ac.in/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The National Examinations Agency has announced that the Common Entrance Examination for Postgraduate College Courses of Central Universities will be held from June 1 to 10.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+