தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் திடீர் மாற்றம்.! பின்னணி என்ன?

நீட் தேர்வு நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில் தற்போது திடீரென தேர்வு மையங்கள் மாற்றி அமைப்பது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பதையும் ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு வரும் மே 5-ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் திடீர் மாற்றம்.! பின்னணி என்ன?

அதாவது நாளை மறுநாள் இத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில் தற்போது திடீரென தேர்வு மையங்கள் மாற்றி அமைப்பது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், குழப்பதையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திற்கு மட்டும் ?

தமிழகத்திற்கு மட்டும் ?

நடப்பாண்டில் நீட் தேர்வை எழுதுவதற்காக நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுககான தேர்வு நுழைவுச் சீட்டு கொடுக்கப்பட்டு தேர்வு மையங்களும் ஒதுக்கப்பட்டு விட்டன. இந்த நிலையில் தற்போது சில தேர்வுமையங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரோல் எண்கள் 410602881 முதல் 410603660 வரையில்

ரோல் எண்கள் 410602881 முதல் 410603660 வரையில்


தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களின் வரிசை எண்கள் 410602881 முதல் 410603660 வரை உள்ளவர்களுக்கு மதுரை விராகனூர், வேலம்மாள் நகரில் உள்ள மதுரை - ராமேஸ்வரம் உயர் நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை விராகனூர், மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் நகரில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரோல் எண்கள் 410608041 முதல் 410608640 வரை

ரோல் எண்கள் 410608041 முதல் 410608640 வரை

ரோல் எண்கள் 410608041 முதல் 410608640 வரை உள்ளவர்களுக்கு திருநெல்வேலி தியாகராஜா நகரில் உள்ள புஷ்பலதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மதுரை அ.வளையாபட்டி அழகர் கோவிலில் உள்ள பாண்டுகுடி ஸ்ரீலட்சுமி நாராயணா வித்யாலயா பள்ளிக்கு தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது.

ரோல் எண்கள் 410611401 முதல் 410611880 வரை

ரோல் எண்கள் 410611401 முதல் 410611880 வரை

ரோல் எண்கள் 410611401 முதல் 410611880 வரை உள்ளவர்களுக்கு மதுரை நரிமேட்டில் உள்ள பிடி ராஜன் சாலையில் அமைந்துள்ள கேந்திர்யா வித்யாலயா தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை விராகனூர், மதுரை - ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள வேலம்மாள் நகரில் அமைந்துள்ள வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரோல் எண்கள் 410611881 முதல் 410612360 வரை

ரோல் எண்கள் 410611881 முதல் 410612360 வரை

ரோல் எண்கள் 410611881 முதல் 410612360 வரை உள்ளவர்களுக்கு மதுரை பி அட்டு டி (P&T) எக்ஸ்டன்சன் பகுதியில் உள்ள புனித மைக்கேல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை எய்ம்ஸ் சாலை, தனபாண்டியன் நகரில் அமைந்துள்ள தனபாண்டியல் பாலிடெக்னிக் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரோல் எண்கள் 410612841 முதல் 410613320 வரை

ரோல் எண்கள் 410612841 முதல் 410613320 வரை

ரோல் எண்கள் 410612841 முதல் 410613320 வரை உள்ளவர்களுக்கு மதுரை திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள கேந்திரியா வித்யாலயா தேர்வு மையமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை திருநகர் 3வது நிறுத்தம் அருகேயுள்ள சிஎஸ் ராமசாரி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரோல் எண்கள் 410616201 முதல் 410616560 வரை

ரோல் எண்கள் 410616201 முதல் 410616560 வரை

ரோல் எண்கள் 410616201 முதல் 410616560 வரை உள்ளவர்களுக்கு ஏற்கெனவே மதுரை ராஜ்ஸ்ரீ கார் கேரில் உள்ள கோபால கிருஷ்ண நகரில் அமைந்துள்ள மகாத்மா மாண்டசெரி மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அது தற்போது மதுரை நாகமலை மேற்கு, மேலகுயில்குடி சாலையில் அமைந்துள்ள எஸ்பிஓஏ (SBOA) பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடைபெறும் இந்த நீட் தேர்வில் ஏற்கனவே தமிழகம் வஞ்சிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்களின் நுழைவுச் சீட்டில் பிழைகள் இருந்தன. தற்போது திடீரென நீட் தேர்வு மையத்தை மாற்றி மாற்றி அறிவிப்பது மாணவர்கள் மத்தியில் குழப்பத்தையும், அதிர்ப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
NTA Changes NEET Exam Centres Days Before The Test; Issues Fresh Admit Cards
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X