தேர்வர்கள் குஷி...! ஆகஸ்ட் 4-ல் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கான தேர்வு அறிவிப்பு...!

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு ஆகஸ்ட் 4-ம் தேதி நடத்தப்படும் என்றும் அதற்கு மார்ச் 28 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.trb.tn.gov.in என்ற இணையதள முகவரியைத் தொடர்புகொள்ளலாம்.

தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக்குகள் போன்று அரசு கலை அறிவியல் கல்லூரிகளிலும் உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என கடந்த ஆண்டு உயர்கல்வித் துறை அறிவித்திருந்தது.
அதைத்தொடர்ந்து, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2024-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணைப் பட்டியலில் உதவி பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரியில் வெளியிடப்படும் என்றும், போட்டித்தேர்வு ஜுன் மாதம் நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தேர்வர்கள் குஷி...! ஆகஸ்ட் 4-ல் 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கான தேர்வு அறிவிப்பு...!

ஆனால், அறிவிக்கப்பட்டபடி உதவி பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு பிப்ரவரியில் வெளியிடப்படாததால் பி.எச்டி. பட்டதாரிகளும், ஸ்லெட், நெட் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரிகளும் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். மேலும் தேர்வுத் தேதியை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் உதவி பேராசிரியர் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. அதன்படி, அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், உளவியல், சமூகவியல், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் 4 ஆயிரம் காலியிடங்கள் போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு மார்ச் 28-ம் தேதி தொடங்கி ஏப்.29-ம் தேதி முடிவடைகிறது. போட்டித்தேர்வு ஆகஸ்ட் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

உதவி பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சம்பந்தப்பட்ட பாடத்தில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் முதுநிலை பட்டமும் அதோடு ஸ்லெட் அல்லது நெட் தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பி.எச்டி. முடித்திருக்க வேண்டும். இற்கான வயது வரம்பு 57 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, தேர்வுக்கட்டணம், தேர்வுமுறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Tamil Nadu Teachers Recruitment Board (TN TRB) has published a notification for direct recruitment of Assistant Professors in the Tamil Nadu Collegiate Educational Service. Eligible and interested candidates can apply for the 4,000 Assistant Professor vacancies at government Arts, Science and government colleges of Education from March 28.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+