முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர உதவும் முதுநிலை நீட் தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 4 மாதங்களுக்குப் பிறகு இந்தத் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
\இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.
நாடு முழுவதும் பிளஸ்-2 முடித்த மாணவ-மாணவிகள் நீட் தேர்வு எழுதி அதன் மூலம் அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்த பின்னர் இளநிலை நீட் தேர்வு நடத்தப்படும். முதுநிலை நீட் தேர்வின் வாயிலாக எம்.டி., எம்.எஸ் மற்றும் முதுகலை டிப்ளமோ மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் இணைந்து கொள்ள முடியும்.

இந்த நிலையில், மார்ச் 3-ந்தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு, ஜூலை 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை படிப்புகளுக்கான கட் ஆஃப் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 ம் ஆண்டு மார்ச் 3 ம் தேதி தற்காலிகமாக நடத்தப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. இப்போது NEET-PG 2024 தேர்வு ஜூலை 7, 2024 அன்று நடத்தப்படும். தேர்வுக்கான தகுதி கட்-ஆஃப் மதிப்பெண் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக ஒருவேளை தேர்வுகள் தள்ளி வைக்கப்படலாம் என்பதால் தேர்வுகளின் சரியான தேதி குறித்த தகவல்களை NBEMS இணையதளத்தில் உறுதி செய்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்தத் தேர்வுகளின் தகவல் அறிவிப்புகள், விண்ணப்பப் படிவங்கள் மற்றும் இந்தத் தேர்வுகளின் பிற விவரங்கள் அறிவிக்கப்பட்டவுடன் https://natboard.edu.in என்ற NBEMS இணையதளத்தைப் அணுகலாம். ஏதேனும் தகவல், தெளிவு உதவிக்கு, NBEMS க்கு அதன் தகவல் தொடர்பு இணைய போர்ட்டலில் உள்ள https://exam.natboard.edu.in/communication.php?page=main என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












