மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று (ஜனவரி 31) வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை nbe.edu.in என்னும் இணையதளத்தில் காணலாம்.

நாடு முழுவதும், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எம்.டி., எம்.எஸ் உள்ளிட்ட பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்புகளுக்கு சுமார் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் மட்டும், 2,500 காலியிடங்கள் உள்ளன.
இந்த மருத்துவ படிப்புகளில் சேர விரும்புவோர் தேசிய தேர்வுகள் வாரியம் (நீட்) நடத்தும், நீட் தேர்வில் தகுதி பெற்ற பின்னரே சேர முடியும்.
2019 - 20 கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த ஜனவரி 6ம் தேதியன்று நாடு முழுவதும், சென்னை, கோவை உள்ளிட்ட 148 நகரங்களில் நடைபெற்றது. இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் பங்கேற்றனர்.
தமிழகத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இத்தேர்விற்கான முடிவுகள் இன்று (ஜனவரி 31) www.natboard.edu.in அல்லது nbe.edu.in என்னும் இணையதள முகவரியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications












