மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை (நீட்) எழுதியவர்கள், தங்களது ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தவறான சுயவிவரங்களைக் குறிப்பிட்டிருந்தால் அவற்றை மே 31-ஆம் தேதிக்குள் திருத்திக் கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தந்தை பெயர், தாயார் பெயர், பிறந்த தேதி, பாலினம், பிரிவு உள்ளிட்டவற்றில் திருத்தம் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேறு தகவல்களை மாற்ற முடியாது என தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5-ஆம் தேதியன்று வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்னதாக சுயவிவரங்களைச் சரிபார்த்து திருத்திக் கொள்வதற்காக இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக என்டிஏ விளக்கமளித்துள்ளது.
சுயவிவரங்கள் சரிபார்ப்பு மற்றும் திருத்தங்களை https://ntaneet.nic.in/Ntaneet/Welcome.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் மேற்கொள்ளலாம்.
neet tamilnadu medical doctor education college job alerts government jobs வேலைவாய்ப்பு மத்திய அரசு வேலை தமிழ்நாடு மருத்துவம் கல்லூரி கல்வி மாணவர்கள்
English summary
Correction Facility in the Particulars of Online Application Form for NEET (UG)-2019
Story first published: Thursday, May 30, 2019, 12:06 [IST]


Click it and Unblock the Notifications












