கொரோனா தொற்றின் காரணமாக செப்டம்பர் 14 நடைபெற்ற நீட் தேர்வில் பங்கேற்க முடியாதவர்களுக்கு வரும் 16ம் தேதியன்று தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு எதிர்ப்புகளுக்கும், சர்ச்சைகளுக்கும் நடுவே கடந்த செப்டம்பர் 14ம் தேதியன்று நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் சிலர் இந்தத் தேர்வில் பங்கேற்க முடியாமல் போனது.
அவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் வரும் அக்டோபர் 14ம் தேதியன்று நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனிடையே, இந்த மறு தேர்விற்கான முடிவுகளை அக்டோபர் 16-ம் தேதியன்று வெளியிடப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.