சமீபத்தில் ஏற்பட்ட ஃபானி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் நீட் தேர்வு வரும் மே 20ஆம் தேதி நடைபெறும் என என்டிஏ தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான நீட் பொது நுழைவுத் தேர்வு கடந்த மே 5ம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வும் நடைபெற்றது.
ஆனால், வங்கக் கடலில் உருவான ஃபானி புயலால் ஒடிசா கடுமையாக பாதிக்கப்பட்ட காரணத்தினால் அம்மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் வரும் மே 20ஆம் தேதியன்று நீட் தேர்வு நடைபெறும் என என்.டி.ஏ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
English summary
NEET 2019 for Odisha centers to be conducted on May 20, check full details here
Story first published: Tuesday, May 7, 2019, 16:58 [IST]


Click it and Unblock the Notifications












