பத்தாம் வகுப்பு மாணவர்களே தேசிய திறனறிவு தேர்வுக்கான அறிவிப்பு விண்ணப்பிக்க தயாராகுங்கள்

Posted By:

பத்தாம்வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்க மாணவர்கள் ஆகஸ்ட் 21 முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு நவம்பர் மாதம் தொடங்குகிறது

தேசியதிறனாய்வு தேர்வு நவம்பர் மாதத்தில் நடைபெறும் இத்தேர்வுக்கு நடப்பு கல்வியாண்டில் அங்கிகாரம் பெற்ற பள்ளியில் பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் . செப்டம்பர் 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது .

பத்தாம் வகுப்பிற்க்கான தேசிய திறனாய்வு தேர்வில் எழுதும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பத்தை பெற்றுகொள்ள கல்வித்துறை தேர்வி இயக்கத்தில் இருந்து நேரடியாக டவுன்லோடு செய்துகொள்ளலாம். தேர்வு கட்டணமாக ரூபாய் 50 செலுத்த வேண்டும் . விண்ணப்பத்தை தலைமை ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும் . கூடுதல் விவரங்களை தேர்வித்துறை இயக்கம் மூலம் அறிந்துகொள்ளலாம் .

http://www.dge.tn.gov.in/ தேசியதிறனாய்வு தேர்வுக்கான விண்ணப்பத்துடன் ஏதேனும் விவரங்கள் அறிய இவ்விணையதளம் உதவிகரமாக இருக்கும் .

தேசிய திறனாய்வு தேர்வானது என்சிஇஆர்டி என அழைக்கப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் நடத்தும் தேர்வானது அறிவியல் தொடர்பான திறனாய்வு தேர்வு மாணவர்களுக்கு நடத்தப்படுறது 1964 ஆம் வருடம் முதல் இத்தேர்வானது நடத்தப்பட்டு வருகின்றது. எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கான கல்வி உதவிதொகை வழங்கப்படும் .

தேர்வு நேரத்திற்க்குள் மாணவர்கள் தங்கள் ஆய்வை கட்டுரையாக எழுத வேண்டும் . தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கான நேரடிதேர்வு மூலம் மாணவர்களின் செயல்பாட்டை வைத்து அவர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெறும் . தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களின் உதவும் விதமாக கல்வித்தொகை வழங்கப்படும் . 

சாந்த பதிவுகள்:

10,11, 12 வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை தயார் 

English summary
above article tell about national talent searching exam

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia