இந்திய நேவல் பணிக்கான என்டிஏ தேர்வு அறிவிப்பு

Posted By:

இந்திய ஆட்சிப்பணி ஆணையமான யூபிஎஸ்சி தேசிய பாதுக்காப்பு படைக்கான என்டிஏ தேர்வானது இந்திய நேவல் பணியினை பெற  அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இந்தியன் நேவிக்கான நேசனல் டிபென்ஸ் அகாடமியில் பணிக்கு வேலை வாய்ப்புக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம்.

இந்திய நேவிக்கான என்டிஏ தேர்வினை யூபிஎஸ்சி அறிவித்துள்ளது

யூபிஎஸ்சியின் நேவல் பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 415 ஆகும்.

யூபிஎஸ்சியின் என்டிஏ என அழைக்கப்படும் நேசனல் டிபென்ஸ் அகாடமி மற்றும் நேவல் அகடாமிக்கான தேர்வு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

யூபிஎஸ்சி நடத்தும் இண்டியன் நேவிக்கான என்டிஏ தேர்வை எழுத 2ஜனவரி 1999 மற்றும் 2002, ஜூலை1க்குள் பிறந்திருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் அதாவது 16 ½ வயது முதல் 19 ½ வயதுக்குள் இருப்பவர்கள் மட்டுமே தேர்வு எழுத தகுதியுடையவர்களாவர்கள்.

என்டிஏ மற்றும் நேவல் பணிகளுக்கான வேலை வாய்ப்பு பெற விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி பிப்ரவரி, 05, 2018 ஆகும்.

இந்திய நேவிப்பணிக்கான என்டிஏ தேர்வினை எழுத அறிவிக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியானது பத்து மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இண்டியன் நேவல் பணிக்கு 10 மற்றும் 12 கல்வித் தகுதியுடன்  பிசிக்ஸ் மற்றும் கணிதம் போன்ற பாடங்களை படித்திருக்க வேண்டும். சிபிஎஸ்சி மற்றும் ஸ்டேட் போர்டு பள்ளி பாடங்களை தேர்வுக்கான சில்லபஸ் ஆகும்.

இண்டியன் நேவியில் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பங்களுக்கு விண்ணப்ப கட்டணம் தொகையாக ஆன்லைனில் செலுத்தலாம்.

இந்தியன் நேவியின் என்டிஏ தேர்வுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு  இணைய லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம். இந்தியன் நேவி பணிக்கான என்டிஏ தேர்வினை விண்ணப்பிக்க விரைந்து செயல்படுங்கள்.

இந்திய நேவிப்பணிக்கான என்டிஏ தேர்வுக்க்கு விண்ணப்பிக்க இறுதி நாள் :5.2.2018

சார்ந்த பதிவுகள்:

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

இந்தியன் நேவியின் வேலை வாய்ப்பு பெற வெல்ல வேண்டிய தேர்வுகள்

English summary
Here article tells about NDA Exam for Navy Job

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia