ஜேஇஇ முதன்மை தேர்வில் தமிழக மாணவர் முதலிடம்.!

பி.ஆர்க் படிப்புக்காக நடத்தப்படும் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தமிழக மாணவர் ஆர்.முத்து தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதித்துள்ளார். தேர்வு முடிவுகளை https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்.

ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதானத் தேர்வு என இரு பிரிவாக நடத்தப்பட்டு வருகிறது.

இதில் முதன்மைத் தேர்வானது, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மைத் தேர்வு கடந்த ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடத்தப்பட்டது.

ஜேஇஇ முதன்மை தேர்வில் தமிழக மாணவர் முதலிடம்.!

இதில் பி.ஆர்க், பி.பிளானிங் ஆகிய படிப்புகளுக்கான 2-ம் தாள் தேர்வு ஜனவரி 24-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 55,608 மாணவ, மாணவிகள் எழுதினர். அதற்கான தேர்வு முடிவுகள் https://jeemain.nta.ac.in/ என்ற இணையதளத்தில் வெளியானது. இத்தேர்வில் தமிழக மாணவர் ஆர்.முத்து (பி.ஆர்க்), ஆந்திராவைச் சேர்ந்த கோலாசானி சாகேத் பிரணவ் (பி.பிளானிங்) ஆகியோர் முழு மதிப்பெண்களை எடுத்து தேசிய அளவில் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தைக் கிளிக் செய்து அறியலாம். அடுத்தகட்டமாக ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மைத் தேர்வு ஏப்ரல் 4 முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Muthu R topped the Joint Entrance Examination (JEE) Main paper 2A for BArch while Kolasani Saketh Pranav obtained 100 NTA score in paper 2B for BPlanning. The National Testing Agency (NTA) declared the JEE Main paper 2 result 2024 for session 1 on March 6. A total of 68,147 candidates registered for JEE Main 2024 paper 2A while 36,672 applied for paper 2B. Of the total registered, 51,570 students appeared for BArch paper whereas 24,876 sat for BPlanning paper. The JEE Main paper 2 2024 was conducted on January 24.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+