தேர்வில் கூடுதலாக 1 மணி நேரம்..! யாருக்கு தெரியுமா? யுஜிசி!

தேர்வின்போது மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்குக் கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் அளிக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளில் திருத்தம் செய்து பல்கலைக்கழக மானியக் குழு யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்

தேர்வின்போது மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்குக் கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசம் அளிக்கும் வகையில் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளில் திருத்தம் செய்து பல்கலைக்கழக மானியக் குழு யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்வில் கூடுதலாக 1 மணி நேரம்..! யாருக்கு தெரியுமா? யுஜிசி!

யுஜிசி சார்பில், பார்வைக் குறைபாடு மற்றும் எழுத முடியாத அளவிற்கு கை பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள் தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் சமீபத்தில் வெளியிட்டது.

அந்த புதிய நெறிமுறையில், பார்வைக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் மற்றும் எழுத முடியாத அளவிற்கு கை பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகள் தேர்வு நடத்தும் கல்வி நிறுவனத்திடம் உதவியாளரைக் கேட்கலாம். அல்லது தாங்களாகவே சொந்த உதவியாளரை அழைத்து வரலாம். அவ்வாறு அழைத்து வரப்படும் சொந்த உதவியாளர் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளியின் கல்வித் தகுதியைவிட ஒரு படி கீழே இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

மேலும், தேர்வறையானது மாற்றுத்திறனாளிகள் எளிதில் வந்து செல்லக் கூடிய வகையில் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக, இவர்களுக்கான தேர்வறை தரை தளத்தில் இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும்.

மேலும், தேர்வறையில் பேசும் கால்குலேட்டர், அபாகஸ், பிரெய்லி அளவிடும் டேப், ஜியோமெட்ரி பாக்ஸ் ஆகியவற்றைக் குறிப்பிட்ட மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல புதிய நடைமுறைகள் இதில் இடம்பெற்றிருந்தன. இது மாற்றுத்திறனாளிகளிடையே மிகுந்த வரவேற்பைப் தந்தது.

இருப்பினும், தேர்வின் பொழுது மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கூடுதல் கால அவகாசத்தை மாற்றி, ஒரு மணி நேரத்துக்கு 20 நிமிடங்கள் மட்டுமே கூடுதலாக வழங்கும் வகையில் புதிய நடைமுறையில் அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன. இந்த கூடுதல் கால அவகாசம் போதுமானதாக இருக்காது என்று முறையிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, வழிகாட்டுதலில் இடம்பெற்றிருந்த தேர்வுக்கான கூடுதல் கால அவகாசத்தில் தற்போது மாற்றம் செய்து யுஜிசி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், மூன்று மணி நேரம் நடைபெறும் தேர்வில் உதவியாளரைப் பயன்படுத்தும் மற்றும் பயன்படுத்தாத அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கும் ஒரு மணி நேரம் கூடுதலாகக் கால அவகாசம் அளிக்கலாம் என யுஜிசி அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பானது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
More time for disabling examiner: UGC
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+