ராக்கெட் லாஞ்சிங் கட்டுப்பாட்டு திட்டம் தெரிந்து கொள்க

Posted By:

மிசைல் ஏவுகணை தயாரிப்பு அதன் நடப்பு நிகழ்வுகள் குறித்து அனைவரும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். போட்டி தேர்வர்கள் மாணவர்களுக்கு இது குறித்து தெரிந்து பொது அறிவை வளப்படுத்தலாம். போட்டி தேர்வுகளில் இது குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சார்பாக விடையளிக்கலாம்.

மிசைல் ஏவுகணை

மிசைல் ஏவுகணை கட்டுப்பாடு அதாவது அணு ஆயுத பரவல் தடை குறித்து நாம் தெரிந்து கொள்வோம். மிசைல் எனப்படும் . 500 கிலோவுக்கு மேலான தாங்கு சுமையுடன் சுமார் 300 கிமீ தூரத்திற்கு மேல் பயணித்து கூடிய ஏவுகணைகள், ராக்கெட்டுகள் ,ஆளில்லா விமானங்களின் தொழில் நுட்ப பரவலை தடுக்கும் கட்டுப்பாட்டு விதியே ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாடு அமைப்பாகும்.ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்பானது 1987 இல் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான், கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா இணைந்து உருவாக்கியது ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்பு ஆகும்.
1992 இல் அணு ஆயுதங்கள் மற்றும் பேரழிவை ஏற்படுத்தும் அனைத்து ஆயுதங்களின் உருவாக்கத்தையும் நிறுத்த இவ்வமைப்பு உறுதியானது. இதன் தலைமையிடம் நெதர்லாந்திலுள்ள உள்ள தி கேஹ் ஆகும்.

தற்பொழுது இந்த அமைப்பானது ரசாயன பரவல், உயிரியல் சார் ஆயுதங்களுக்கும் பொருந்தும் வகையில் கொள்கைகளை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது.

 

நோக்கம்:

ஏவுகணைகள், ராகெட்டுகள் அத்துடன் அளில்லா விமானங்களின் பரவல்கள் அதிகரித்தால் இது உலக நாடுகளின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு வழிவகுக்கும். நாடுகளின் ரகசியங்கள் எளிதில் அறிய முடியும் . போன்ற பல்வேறு பாதிப்புகள் இருப்பதை தடுக்கவே இவ்வமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

உலகிலுள்ள மற்ற நாடுகள் ஆயுதங்கள் தயாரித்தால் தனது மார்கெட் பாதிப்படையும் என வல்லரசு நாடுகள் கணக்கிட்டு இந்த அணு ஆயுத பரவல் கட்டுப்பாட்டுத் திட்டத்தை உறுதி செய்து அணு ஆயுத பரவல் கொள்கையினை பின்ப்பற்றி இணையும் நாடுகளை ஒன்றினைத்தது.

 

உறுப்பினர்களின் எண்ணிக்கை :

மொத்தம் 34 நாடுகள் இந்த அணு ஆயுத பரவல் கொள்கையில் கையெப்பமிட்டு அதனால் சில சலுகைகள் பெற்று இணைந்தன இந்தியா ஜூன் 27, 2016 இல் உறுப்பினர் நாடாக இணைந்தது.

இந்தியா உறுப்பு நாடு :

தென்கொரியா நாட்டின் சியோல் நகரில் நடப்பாண்டின் இறுதியில் இந்த அமைப்பின் முழு அளவிலான கூட்டம் நடைபெற்றது. அதன் மூலம் இந்தியா உறுப்பினர் நாடாக மற்ற நாடுகளின் முன்னிலையில் இணைய நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.

ஏவுகணை தடுப்பு திட்டத்தில் உறுப்பினராக ஏவுகணை பரவல் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க இஸ்ரேல், ருமேனியா, ஸ்லேவோக்கியா,மாசிடோனியா போன்ற நாடுகள் தாங்களே முன்வந்து இணையவுள்ளன.

 

இந்தியாவின் ராஜதந்திரம் :

இந்தியா ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு திட்டத்தில் உறுப்பினராக இருப்பாதால் சீனா உறுப்பினாராக விருப்பம் தெரிவித்துள்ளமைக்கு இந்தியா ஒப்புதல் வழங்க வேண்டும்.

ஏற்கனவே அனுஆயுத அளிப்பு (என்எஸ்ஜி ) நாடுகளுடன் இந்தியா இணைய சீனா தடைக்கல்லாக இருந்தது. இனி சீனா ஏவுகணை தொழிநுட்ப கட்டுப்பாடு உறுப்பு நாடுகளுடன் இணைய சீனாவுக்கு இந்தியா தடைக்கல்லாக இருந்து நியூக்ளியர் சப்ளையர் உறுப்பு நாடுகளுடன் இணையும் வாய்ப்பை பெறலாம்.

 

கேள்விளின் தொகுப்பு:

1. ராக்கெட் ஏவ பொதுவாக பயன்படுத்தும்  எரிபொருள் என்ன? 
2. வளிமண்டல காற்று சுவாச உந்து சக்தி செயல் திட்டத்தை பரிசோதிக்கும் அமைப்பு எது?
3. இந்தியா எப்படி என்எஸ்ஜிக்குள் நுழையலாம்?
4. எத்தனை உறுப்புகள் நாடுகள் உள்ளன?
5. எத்தனை உறுப்பு நாடுகள் இணைய உள்ளன?

சார்ந்த பதிவுகள்:

இந்திய பாராளுமன்றம் முழு தொகுப்பு மற்றும் கேள்வி பதில்கள் 

 பட்ஜெட் வரலாறும் அதன் போக்கும் அறிவோம்

English summary
Article tells about rocket launching plans of India

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia