சென்னைப் பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி நிறுவனம் சார்பில் கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து அப்பல்கலைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
சென்னைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் தொலைதூரக் கல்வியில், இளநிலை படிப்புகளுக்கும், எம்ஏ, எம்காம், எம்எஸ்சி, எம்எல்ஐஎஸ் உள்ளிட்ட முதுநிலை படிப்புகள் மற்றும் சில சான்றிதழ் படிப்புகளுக்கும் கடந்த 2018 டிசம்பரில் தேர்வுகள் நடைபெற்றன. அவற்றின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டது.
அதேபோன்று அந்த காலகட்டத்தில் எம்பிஏ படிப்புக்கும் தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள்
www.ideunom.ac.in என்ற இணையதள முகவரியில் திங்கள்கிழமை வெளியிடப்பட உள்ளன. மறு மதிப்பீடு செய்ய கோரி விண்ணப்பிக்க விரும்புவோர் ஒவ்வொரு பாடத்திற்கும் தலா ரூ.1,000 செலுத்த வேண்டும். அதற்கான விண்ணப்ப நடைமுறைகள் அனைத்தும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












