சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

Posted By:

சென்னை: சென்னைப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளின் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை(செப்டம்பர் 7) வெளியாகவுள்ளன.

சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

தொலைநிலை கல்வி நிறுவனத்தின் சார்பில் பட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் கடந்த மே மாதம் நடைபெற்றன. ஏராளமான மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர். இந்தத் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ம் தேதி இரவு வெளியாகவுள்ளன.

தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.ideunom.ac.in, www.unom.ac.in ஆகிய இணையதளங்களில் இரவு 8 மணிக்குப் பிறகு பார்த்து தெரிந்துகொள்ளலாம். சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Distance education Department of Madras University has announced the May exam results dates. The results can be viewed From 8 pm on sep 7 from the following sites www.ideunom.ac.in, www.unom.ac.in

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia