சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி பயில்வோர் தோ்வு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க வரும் 9-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட தொலைநிலைக் கல்வி நிறுவனங்களின் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்பிற்கான தோ்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இத்தோ்வு விடைத்தாளின் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அதன்படி, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள் தாள் ஒன்றுக்கு ரூ. 1,000 வீதமும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் தாள் ஒன்றுக்கு ரூ. 300 கட்டணமாகச் செலுத்த வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் அக்டோபர் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications












