தள்ளிப் போகும் கர்நாடக பியூசி தேர்வு முடிவுகள்... தவிக்கும் மாணவர்கள்...!!

Posted By:

டெல்லி: கர்நாடகத்தில் 2-ம் ஆண்டு பியூசி தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் தவித்துப் போயுள்ளனர்.

முன்னதாக இந்தத் தேர்வு முடிவுகள் மே 2-ம் தேதி வெளியாகும் என்று கர்நாடக மாநில இடைநிலைக் கல்வித்துறை அமைச்சர் கிம்மனே ரத்னாகர் தெரிவித்திருந்தார்.

தள்ளிப் போகும் கர்நாடக பியூசி தேர்வு முடிவுகள்... தவிக்கும் மாணவர்கள்...!!

ஆனால் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணியை பேராசிரியர்கள் புறக்கணித்ததால் தேர்வு முடிவுகள் வெளியாவது 3 வாரம் தள்ளிப் போகும் என்று தெரியவந்துள்ளது.

1973-ஆம் ஆண்டு முதலே கர்நாடக மாநில 2-ம் ஆண்டு பியூசி தேர்வு முடிவுகள் மே 2வது வாரத்தில் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த ஆண்டில் பேராசிரியர்கள் புறக்கணிப்புப் போராட்டத்தால் முடிவுகள் வெளியாவது தள்ளிப் போகிறது.

ஆனாலும் கர்நாடக மாநில பொது நுழைவுத் தேர்வு முடிவுகளுக்கு முன்னதாக முடிவுகளை வெளியிட கர்நாடக மாநில பியூசி வாரியம் முடிவு செய்துள்ளது. பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் மே 28-ம் தேதி வெளியாகின்றன.

இதையடுத்து விடைத்தாள்கள் திருத்தும் பணியில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பியூசி வாரியத்தைச் சேர்ந்த 650 ஊழியர்கள் ஆகியோரைக் கொண்டு பியூசி முடிவுகளை முடிந்தவரை வெளியிட வாரியம் முடிவு செய்துள்ளது. பொது நுழைவுத் தேர்வு முன்னதாக தேர்வு முடிவுகள் வெளியாகவேண்டுமே என்று மாணவர்கள் தவியாய்த் தவித்து வருகின்றனர்.

English summary
The results of Karnataka 2nd PUC examination 2016 is likely to be declared in the last week of May. Earlier, the primary and secondary education minister Kimmane Rathnakar had announced that the results would be declared on May 2, but there will be delay by 3 weeks following the boycott of evaluation by lecturers. The education minister had announced May 2 as a result declaration date to relieve students' from apprehension that the boycott of evaluation may throw the calendar of events into disarray. Speaking about the unconfirmed statements that question papers of subjects other than chemistry had been leaked, the minister said "'There would be no more re-exams in any subject of II PUC examination held in March-April'.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia