ஈரோடு சட்டப்பணி ஆணையத்தில் வேலை வாய்ப்ப்பு அறிவிக்கை வெளியீடு

Posted By:

ஈரோடு சட்டப்பணி ஆணைகுழுவில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் காலியாகவுள்ள இளநிலை பணியாளர் , நிர்வாக அதிகாரி, அலுவலக உதவியாளர் பனியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சட்டப்பணி ஆணையத்தில் வேலை வாய்ப்பு பணிக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

இளநிலை உதவியாளர் :
இளநிலை உதவியாளர் பணிக்கு நிரப்பபடும் காலியிடம் மொத்தம் 3 ஆகும். அதற்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

இளநிலை நிர்வாக உதவியாளர்: கணிபொறி இயக்குபவர் பணியிடத்திற்கு பிளஸ் 2 முடித்திருந்தால் போதும். 12 ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .

அலுவலக உதவியாளர் காலிப்பணியிடம் 2 ஆகும். இப்பணியிடத்தில் வேலை வாய்ப்பு பெற அவற்றில் 8 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகனங்களை இயக்கும் எல்எம்வி வாகன உரிமம் வைதிருக்க வேண்டும் . வயது வரம்பு குறைந்த பட்சம் 18 வயது இருக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பதை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை நகழ்களை இணைத்து கீழ்க்காணும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை சென்று சேரவேண்டிய கடைசி நாள் நவம்பர் 24 ஆகும்.

முகவரி:
நீதிபதி / தலைவர்,
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகம்,
மாவட்ட நீதிமன்ற வழாகம்,
ஈரோடு 638001

இணைய தள விவரத்தை கிழே இங்கு இணைத்துள்ளோம் அதன் மூலம் தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம். வேலை வாய்ப்பு தேடி கொண்டிருப்போர்க்கான ஒரு நல்ல வாய்ப்பு அதனை பயன்படுத்தி கொள்ளலாம். 

சார்ந்த பதிவுகள்:

யூபிஎஸ்சியின் இந்திய ராணுவ பணிகளுக்கான சிடிஎஸ் தேர்வு அறிவிப்பு 

இந்திய இன்ஜினியரிங் நிறுவனத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்

English summary
here article tell about job notification of district court

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia