ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம்

வரும் ஏப்ரல் மாதம் நடக்க உள்ள ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வுக்கான விண்ணப்ப பதிவு நேற்று முடிவடைந்த நிலையில், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள 2 நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் விவரங்களை nta.ac.in என்ற தளத்தில் மாணவச் செல்வங்கள் அறியலாம்.
ஜேஇஇ மெயின், அட்வான்ஸ்டு தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள் நாட்டில் உள்ள உயர்கல்வி
நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் போன்ற நிறுவனங்களில் சேர முடியும்.

இதுதொடர்பாக என்டிஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நம் நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவு தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதன்மை (மெயின்) தேர்வு, பிரதான (அட்வான்ஸ்டு) தேர்வு என 2 பிரிவாக நடைபெறும்.

ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அவகாசம்

இதில் முதன்மை தேர்வு ஆண்டுதோறும் 2 கட்டங்களாக தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் நடத்தப்படுகிறது. அதன்படி, 2024-25 கல்வி ஆண்டுக்கான ஜேஇஇ முதல்கட்ட முதன்மை தேர்வு கடந்த ஜனவரி 24 முதல் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அடுத்தகட்டமாக ஜேஇஇ 2-ம் கட்ட முதன்மை தேர்வு ஏப்ரல் 4 முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால், jeemain.nta.nic.in என்ற இணையதளம் வழியாக மார்ச் 6, 7-ம் தேதிகளில் மேற்கொள்ளலாம். இதுவே இறுதி வாய்ப்பு என்பதால் மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்த கூடுதல் விவரங்களை nta.ac.in என்ற தளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
JEE Advanced 2024 Application Form Correction facility will be provided by the exam conducting authority. Candidates can make correction in application form through the website. JEE Advanced is a national level entrance exam. This exam will be regulated by the Indian Institute of Technology, Madras. JEE Advanced is organized to get admissions into UG courses in Engineering, Architecture, pharmaceutical and Science field.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+