உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தல் வைரசாக உருவெடுத்தெடுக்க கொரோனாவின் காரணமாக இந்தியாவில் 144 ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இவற்றில் ஜெஇஇ தேர்வும் அடங்கும்.

புதிய தேர்வு தேதிகள் ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு தேதியோடு இணைந்து வருகிற சிக்கல் ஏற்படும் என்பதாலும், ஜேஇஇ மெயின்ஸ் தேர்வர்கள் பல நகரங்களுக்குப் பயணிக்க வேண்டியிருக்கும் என்பதாலும் அதுவும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது.
நிலைமையைச் சீராய்வு செய்த பிறகு புதிய ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு தேதி மார்ச் 31ம் தேதி அல்லது அதற்குப் பிறகு அறிவிக்கப்படும் என்றும் தேர்வு முகமையின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது, ஏப்ரல் 15 ஆம் தேதி ஜேஇஇ மெயின் தேர்வுக்கான ஹால்டிக்கெட் (JEE Admit Card) குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தேர்வுகள் மே மாதம் இறுதியில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்த மேலும் விபரங்களை அறிய www.jeemain.nta.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தைக் காணவும். நேரடியாக அறிவிப்பைக் காண இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












