ஜேஇஇ பிரதானத் தேர்வு: 12 லட்சத்துக்கும் மேல் குவிந்த விண்ணப்பங்கள்!!

Posted By:

சென்னை: உயர்கல்வி நிறுவனங்களில் சேர உதவும் ஜேஇஇ பிரதானத் தேர்வு எழுதுவதற்காக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 1 லட்சம் விண்ணப்பங்கள் குறைந்துள்ளன.

ஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ்சி, என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக ஆண்டுதோறும் ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு இந்தத் தேர்வு 13.04 லட்சம் பேர் எழுதினர். இந்த ஆண்டில் இந்தத் தேர்வை எழுத 12.07 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

ஜேஇஇ பிரதானத் தேர்வு: 12 லட்சத்துக்கும் மேல் குவிந்த விண்ணப்பங்கள்!!

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது எண்ணிக்கை ஒரு லட்சம் அளவுக்குக் குறைந்துள்ளது. பொறியியல் துறையில் மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்ததுதான் இதற்குக் காரணம் என்று துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மகாராஷ்டிரத்திலிருந்து 1.63 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்தில் 1.50 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

English summary
Joint Entrance Examination Main (JEE Main) 2016 has registered decrease in number of applications for the second consecutive year. According to reports, about 12.07 lakh aspirants have registered for JEE Main examination against 13.04 lakh registrations last year. The numbers apparently have declined by a lakh this year compared to the 50,000 dip recorded last year. Lack of interest in engineering as a career path has led to declining number of registrants, says academic experts.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia