இந்திரா காந்தி திறந்தநிலை (இக்னோ) பல்கலைக்கழகத்தில் ஜனவரி பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி மார்ச் 31 வரை தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயிலலாம். கூடுதல் விவரங்களுக்கு https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.
இதுதொடர்பாக மத்திய அரசு பல்கலைக்கழகமான 'இக்னோ'வின் சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைதூரக்கல்வி வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் சான்றிதழ், டிப்ளமா, பட்டம், முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது. இக்னோவில் பிஏ, பிஎஸ்சி, பிகாம் படிப்புகளில் சேரும் தகுதியுள்ள எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு கல்விக்கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஜனவரி பருவ சேர்க்கை மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் சேரலாம். மாணவர் சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம். மேலும், சென்னை வேப்பேரி பெரியார் திடலில் இயங்கும் இக்னோ மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு 'இக்னோ'வின் சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications












