ஐபிபிஎஸ் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு

Posted By:

சென்னை: தி இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்க்கிங் பர்சனல் செலக்ஷன்(ஐபிபிஎஸ்) தேர்வுக்கான நுழைவுக் கூட சீட்டுகள் தற்போது ஐபிபிஎஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஐபிபிஎஸ் சார்பில் நடத்தப்படும் கிளார்க்-5 பணியிடங்களுக்கான தேர்வாகும் இது. இந்தத் தேர்வுகள் 2016-ம் ஆண்டு ஜனவரி 1, 3 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

இதற்கான நுழைவுச் சீட்டுகளைப் பெற ஐபிபிஎஸ் இணையதளமான http://www.ibps.in -க்குச் சென்று 'Download your call letter for Online Main Exam for CWE Clerks-V' என்ற இடத்தில் கிளிக் செய்து உங்களது பதிவு எண், பிறந்த தேதி, பாஸ்வேர்டு ஆகியவற்றைத் தெரிவித்து டவுன்லோடு செய்துகொள்ளலாம்.

ஐபிபிஎஸ் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு

இந்தத் தேர்வுகளுக்காக நுழைவுச் சீட்டுகள் தபாலிலோ அல்லது மெயில் மூலமாகவோ அனுப்பப்படமாட்டாது.

தேர்வுகள் 2 மணி நேரம் நடைபெறும். 200 மதிப்பெண்களுக்கானத் தேர்வாகும் இது. தேர்வு, பிரதானத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் அலகாபாத் வங்கி, ஆந்திரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, கனரா வங்கி, சென்டிரல் பாங்க் ஆஃப் இந்தியா, கார்ப்பொரேஷன் வங்கி, தேனா வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ், பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கி, சிண்டிகேட் வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, விஜயா வங்கி ஆகிய வங்கிகளில் பணியமர்த்தப்படுவர்.

English summary
The Institute of Banking Personnel Selection (IBPS) has released the call letter for main examination of Clerical Cadre 5 on its official website. The IBPS CWE Clerks-V Main Exam is scheduled to be held on January 1, 2016 and January 3, 2016. Steps to download IBPS CWE Clerks-V Main Exam Call Letter: Go to the official website Click on the link, 'Download your call letter for Online Main Exam for CWE Clerks-V' Enter registration number, date of birth and password Sumbit the same, the admit card will be displayed on the screen.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia