ஐஏஎஸ் தேர்வை வெல்ல பொது அறிவு கேள்விகள் குறித்த குறிப்புகள்

Posted By:

ஐஏஎஸ் தேர்வுக்கான விண்ணப்பச்சுட்டிங்களா. நல்ல நாள் நேரம் பார்த்து விண்ணப்பிப்பவர்கள் ஒரு பக்கம் கடைசி நேர சிக்கலை தீர்க்க வேண்டி முன்னமே விண்ணப்பிப்பவர்கள் ஒரு பக்கம் என அதிகரித்து காணப்படுகின்றது. எது எப்படியானாலும் விரைவில் விண்ணப்பிக்கவும். தேர்வில் ஜெயிக்க முடியுமா, எழுத முடியுமா என்ற யோசனைளை விடுங்கள் விண்ணப்பியுங்கள்.

யூபிஎஸ்சி தேர்வை பொறுத்தவரை முக்கியமானது படிப்பது அத்துடன் அவற்றை ரிவைஸ் செய்வது ஆகும். நீங்கள் படித்தலுடன் ரிவைஸ் செய்வது ரொம்ப முக்கியம் ஆகும். அதைவிட டெஸ்ட் எனப்படும் மாக் டெஸ்டினை எழுத வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு:

யூபிஎஸ்சி என்பது எளிதானது அல்ல ஆனால் எளிதாக தேர்வை வெல்ல தெரிந்தால் சாதிக்கலாம். யூபிஎஸ்சி பொது அறிவை பொருத்தவரை ஏற்கனவே தெரிவித்தப்படி படிக்க வேண்டியது இந்திய அரசியலமைப்பு, முன்னுரை முதல் முடிவு வரை முகவுரை, அரசியல் அமைப்பு சிறப்புகள், அடிப்படை உரிமைகள், அடிப்படை கடமைகள், பாராளுமன்றம், குடியரசு தலைவர், பிரதமர், அமைச்சரவை, மாநில சட்டசபை, தேர்தல் கமிஷன், யூபிஎஸ்சி, காம்ட்ரோலர் ஆப் ஆடிட்ட ஜென்ரல் என முக்கியமான அட்டவணைகள், சட்டவிதிகள், அட்டவணைகள் அவற்றின் முக்கியத்துவங்கள் அவற்றின் குறிப்புகளையும், அரசியலமைப்பு சட்டவிதிகளில் ஏற்ப்பட்டுள்ள நடப்பு நிகழ்வில் மாற்றங்கள் அனைத்தையும் படித்திருக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட டாப்பிக்குகள் அனைத்தையும் படித்தலுடன் ரிவைஸ் செய்திருக்க வேண்டும். அத்துடன் அவற்றில் டிப்ஸ் எடுத்திருக்க வேண்டும். அதுகுறித்த குறிப்புகளை சாட்டுகளாக எழுதி வைத்து அடிக்கடி பார்த்து நினைவில் வைத்து கொண்டு செயல்பட வேண்டும். நீங்கள் படித்த பாடங்கள் சரிதானா என பரிசோதிக்க டெஸ்ட் பேட்சில் தெரியும். அங்கு கேட்கப்பட்டுள்ள கேள்விகள் அனைத்தையும் உங்களால் எளிதாக விடை கொடுக்க முடிக்கின்றதா என்பதை கூர்ந்து கவனியுங்கள் அப்படி கவனித்தால் அனைத்து விவரங்களையும் பெறலாம். தவறினை சரி செய்யலாம்.

சட்டவிதிகள்:

சட்டவிதிகள் மற்றும் அரசியலமைப்பு அட்டவணைகள் எவ்வளவு படித்தாலும், எத்தனை வருடம் படித்தாலும் அதனை நினைவில் வைக்க வேண்டியது அனைவரின் கடமை ஆகும். ஆனால் அதனை நினைவில் வைப்பதிலும், சட்டவிதிகள் தொடர்பான விளக்கங்களில் குழப்பம் ஏற்படுவது பெரும்பாலான யூபிஎஸ்சி தேர்வர்களிடையே ஏற்படுவது இயல்புதான்.

சட்டவிதிகள் மற்றும் அரசியலைப்பு அட்டவணைகள், சட்டவிதிகளுக்கான விளக்கங்களை மறக்க கூடாது எப்பொழுது கேட்டாலும் தெரிய வேண்டுமானால் தொடர்ந்து 90 நாட்கள் அதனை தொடர்ந்து பாருங்கள். மேற்குறிப்பிட்ட பேக்ட்களை சாட்டுகளாக சிறிய வார்த்தையாக வடிவமைக்கலாம் அல்லது உங்களுக்கு பிடித்த வாழ்வு நிகழ்வுகளோடு சம்மந்தப்படுத்தி நினைவில் வைக்கலாம்.

கமிசன்கள் :

அரசியலமைப்பில் முக்கியமாக கமிசன்கள் மிகமுக்கிய பங்கு வகிப்பவை ஆகும். அதனை பட்டியலிட்டு தொகுத்து எழுதி வைத்து கொண்டால் தொடர்ந்து படிக்க எளிமையாக இருக்கும். படித்தலுடன் ரிவைஸ் செய்ய வேண்டும்.

அரசியல் அமைப்பு நடைமுறை:

அரசியல் அமைப்பு என்பது நமது வாழ்வியல் நடைமுறைகளுடன் சம்மந்தப்பட்டவை அதனை வாழ்வியலுடன் ஒப்ப்பிட்டு எது எப்படி நடக்கின்றது என்பதை அறிந்தால் அரசியலமைப்பு எளிதாக இருக்கும். அரசியல் அமைப்பு எதிர்காலத்தில் எப்படி இருக்க வேண்டும் என்னென்ன மாற்றங்கள் இருக்க வேண்டும் என்பதை எப்பொழுது தானாகவே உங்கள் மனது கணக்கீடு செய்கின்றதோ அப்பொழுது அரசியல அமைப்பினை சிறப்பாக படித்துவைத்துள்ளீர்கள் என்பது அர்த்தமாகும்.

டெஸ் பேட்ச் டிஸ்கஷன் :

டெஸ்ட் பேட்ச் டிஸ்கஷன் என்பது முக்கியமானது ஆகும் . நீங்கள் எந்த அளவிற்கு டெஸ் பேட்சுகளை எழுதுகிறிர்களோ அந்த அளவிற்கு டிஸ்கஷனில் பங்கேற்க வேண்டும். அங்கு கொடுக்கப்படும் தகவல்களை நீங்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும். இதனை சரியாக செய்தால் தேர்வர்களின் திறன் பெருகும் எளிதாக அடுத்தடுத்த அரசியலமைப்பு சார்ந்த நடப்பு நிகழ்வுகளை படிக்கும் பொழுது எளிதான இணைப்பு செய்ய எளிதாக இருக்கும்.

கேள்விகளை உருவாக்கி படியுங்கள் :

அரசியல் அமைப்பினை பொருத்தவரை கேள்விகளை உருவாக்கி படிக்க வேண்டும். அதனை மறுகோணத்தில் இருந்து பார்க்கும் பொழுது கேள்வி திறனாய்வு கிடைக்கும். யூபிஎஸ்சியில் கேட்கப்படும் கேள்விகள் உங்களுக்கு சிக்கலானதாக இருக்காது. எளிதாக சமாளிக்க கூடிய வகையில் இருக்கும்.

இந்திய அரசியல் அமைப்பானது நாட்டின் நிர்வாகம் அரசு எந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து தெரிவிக்கின்றது. அதனை ஆழ படித்தலுடன் அது குறித்து திறனாய்வு செய்தல் ஒருபக்கம் இருக்கட்டும் முதலில் ஆர்வம் இருக்க வேண்டும். ஆர்வம் இருக்கும் பொழுது எளிதாக நாம் அதனை அடையலாம்.

 

சார்ந்த பதிவுகள்:

ஐஏஎஸ் லட்சியப் போட்டி தேர்வுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

English summary
the article tells about tips for ias dream

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia