ஐஏஎஸ் தேர்வில் தோல்வி எதனால்? – இவைதான் காரணங்கள்!

Posted By:

சென்னை: நம் நாட்டின் எல்லா துறைகளிலும் உயரிய பதவிகளில் நியமனம் செய்யப்பட்டு நிர்வாகத்தைத் திறம்பட நடத்துவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிற நபர்கள்தான் குடியுரிமைப் பணியாளர்கள்.

இந்த நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுத்துக் கொள்ள விரும்புகிறவர்களும், நிறைந்த அனுபவத்தைப் பெற நினைப்பவர்களும் இப்பணியில் மகிழ்ச்சியடைகிறார்கள்.

எனினும், ஐஏஎஸ் தேர்வில் தோல்வியுற்றவர்கள் ஏன் தோல்வியுறுகிறார்கள் என்பதையும் தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் உற்று நோக்க வேண்டும்.

ஐஏஎஸ் தேர்வில் தோல்வி எதனால்? – இவைதான் காரணங்கள்!

தோல்விக்கான முக்கிய காரணங்கள்:

 • அடிப்படையான ஆர்வமும், போதுமான தேடலும் இல்லாதவர்கள்.
 • இந்தத் தேர்வை எதிர்கொள்ளத் தகுதியில்லாதவர்கள். அதாவது பயம் கொண்டவர்கள்.
 • மற்ற தேர்வுகளைப் போல தேர்வு அன்றைக்கு மட்டும் புத்தகங்களைப் புரட்டிவிட்டுச் செல்பவர்கள்.
 • பிரிலிமினரி தேர்வானதும் ஐ.ஏ.எஸ் அதிகாரி போல காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு நடப்பவர்கள்.
 • இத்தேர்வையும் வேலை வாய்ப்பு தேடும் இன்னொரு களமாகக் கருதிக் கொள்பவர்கள்.
 • கல்லூரித் தேர்வு அணுகுமுறையினைக் கொண்டவர்கள்.
 • எளிய முறையில் / குறுக்கு வழியில் இத்தேர்வை அணுகமுடியுமா என எதிர்பார்த்து அவற்றில் சக்தியை இழப்பவர்கள்.
 • முதல் முறை தோல்வியடைந்ததும், மரவட்டை குச்சியால் குத்தியதும் சுருங்குவது போலத் தன்னைச் சுருக்கிக் கொள்பவர்கள்.
 • தன் தோல்விக்கான காரணங்களை அலசி அவற்றை சரி செய்து கொள்ளாதவர்கள்.
 • ஒவ்வொரு முறையும் விருப்பப்பாடங்களை விருப்பம் போல மாற்றுபவர்கள்.
 • விருப்பமில்லாத பாடங்களை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுப்பவர்கள்.
 • சரியான யுக்திகளுடன் அணுகாமல் வெறுமனே கடின உழைப்பு உழைப்பவர்கள்.

இவர்கள்தான் ஐஏஎஸ் தேர்வில் பெரும்பான்மையான அளவில் தோல்வியைத் தழுவுகின்றனர். இந்த அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டு கடின உழைப்பும், முயற்சியும் கொண்டிருந்தால் கண்டிப்பாக நீங்களும் ஐஏஎஸ்தான்!

English summary
Main reasons for IAS examination failure. If the students make it clear, success will their hands soon.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia