ஐஏஎஸ் தேர்வை வெல்ல பொருளாதாரப் பாடத்தில் படிக்க வேண்டியவை அறிவோம்!

Posted By:

ஐஏஎஸ் தேர்வில் முதண்மை தேர்வில் பொருளாதார பாடத்தில் குறிப்பிடத்தக்க அளவு இருக்கும். பொருளாதார பாடங்கள் பற்றிய ஒரு தெளிவு பெற சிபிஎஸ்சி பாடபுத்தகங்கள் முழுமையாக உதவிகரமாக இருக்கும். இந்து மற்றும் எக்கானிமிக்ஸ் டைம்ஸ் நாளிதழ்கள் படிக்க வேண்டும் அத்துடன் எக்கானிமிக்ஸ் சர்வே புத்தகம் முக்கியமானது ஆகும்.

ஐஏஎஸ் தேர்வில் மிகவும் டிரிக்கியாக அதிக பேக்ட்கள் மற்றும் படிக்க வேண்டிய கவனிக்க பாடம் என்றால் அது பொருளாதாரப்பாடம் ஆகும்.
இந்திய பொருளாதாரம் அதன் அடிப்படையுடன் அதன் நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பினை ஒத்து பாடங்களை படிக்க வேண்டும். 

பொருளாதார அடிப்படை:

பொருளாதார அடிப்படை என்பது பொருளாதாரம் என்பது என்ன இந்திய பொருளாதாரம், உலக பொருளாதாரம் என பல்வேறு வரையறைகள் உள்ளன. இந்திய பொருளாதாரத்தில் நாட்டு வருமானம், தனிமனித வருமானம், தலா வருமானம், வேளாண்மை, முதன்மை தொழில், இரண்டாம் தொழில், தொழிற்சாலைகள், வங்கிகள், வரிகள், நேரடி வரிகள், மறைமுக வரிகள் மற்றும் பங்கு சந்தை, இந்திய ரிசர்வ் வங்கி நாட்டு பொருளாதாரத்தில் அதன் முக்கிய பங்கு அனைத்தும் படிக்க வேண்டும்.

ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட், பண கொள்கை, எக்கானிமிக் சர்வே போன்றவை பொருளாதாரத்தின் அடிப்படை பாடங்கள் ஆகும். இவ்வடிப்படை பாடங்கள் என்சிஆர்டி மற்றும் தமிழ் தகவல்கள் வேண்டுமானல் சமச்சீர் பாடப்புத்தகத்தில் பெறலாம்.

நடப்பு நிகழ்வுகளின் பொருளாதாரம்:

ஐஏஎஸ் தேர்வில் நடப்பு நிகழ்வுகளில் பொருளாதாரத்தின் பங்கு அது தொடர்பான கேள்விகள் முதன்மை தேர்வு மற்றும் மெயின் தேர்வில் கேட்பதற்கான வாய்ப்புகள் அதிகம். பொருளாதார நடப்பு நிகழ்வுகள் அதன் முழுமையான போக்கு தெரிய வேண்டுமானால் . எக்கானிமிக்ஸ் டைம்ஸ் தொடர்ந்து படிக்க வேண்டும். ஆங்கில ஹிந்து நாளிதழில் உள்ள பொருளாதார பகுதி படிக்க வேண்டும்.

எக்கானிமிக் சர்வே:

மத்திய அரசு வெளியிடும் எக்கானிமிக் சர்வேயினை யூபிஎஸ்சி தேர்வுக்கு படிப்போர்கள் நிச்சயம் படிக்க வேண்டும். எக்கானிமிக் சர்வே ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் நடைபெற்ற பொருளாதார நடவடிக்கைகளை கொணட ஒரு பதிப்பு ஆகும். அதனை யூபிஎஸ்சி படிப்பவர்கள் அனைவரும் படிக்க வேண்டும். அதனை தொடர்ந்து படித்தால் யூபிஎஸ்சி தேர்வின் மூன்று நிலை தேர்வையும் எளிதில் வெல்ல முடியும்.

பட்ஜெட்:

இந்திய பொருளாதாரத்தின் முக்கிய பங்கு வகிக்கும் பட்ஜெட் ஒவ்வொரு ஆண்டும் பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்திய பார்லிமெண்டில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார நடவடிக்கையின் ஒராண்டு நடவடிக்கையையும் புதிய அறிவிப்புகளையும், மாற்றங்களை கொண்டிருக்கும். பட்ஜெட் பொது பட்ஜெட் ரயில்வே பட்ஜெட் என இருவகையாக பிரித்து தாக்கல் செய்யப்படும். இந்த பட்ஜெட்டினை அனைத்தும் தேர்வர்களும் படிக்க வேண்டும். இது தொடர்பான நேர்மறை அல்லது எதிர்மறை கேள்விகள் கேட்கப்படும். குறிப்புகள் எடுத்து படிக்க வேண்டும். ரயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட்டில் ஏற்ற இரக்கங்கள் அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும். இது தொடர்பான அனைத்து குறிப்புகளும் எடுத்து படிக்க வேண்டும்.

பொருளாதார திட்டங்கள்:

பொருளாதார வளர்சிக்கு இந்தியா பின்ப்பற்றிய தேசிய திட்டக்குழு, கமிசன்கள், தேசிய வளர்ச்சி குழு, ஐந்தாண்டு திட்டங்கள் போன்றவற்றை ஆண்டு வாரியாக படிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சி போக்கு எந்த அளவில் தொடங்கி எங்கு முடிகின்றது என்பதை அறிந்து படிக்க வேண்டும். அப்பொழுதுதான் எளிதில் கேள்விகளுக்கு விடை கொடுக்க முடியும்.

வங்கிகள்:

ஐஏஎஸ் தேர்வில் வங்கிகள் பொதுத்துறை, தனியார்த் துறை, இந்திய ரிசர்வ் வங்கிகள் அதன் செயல்பாடுகள் அதன் அரிவுரைகள் நாட்டின் வளர்ச்சியில் வங்கிகள் அதன் செயல்பாடுகள் அனைத்தையும் படிக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியில் நாட்டின் நடப்பு பங்களிப்பை முழுமையான கண்ணோட்டம் இருக்க வேண்டும். அப்பொழுது கேள்விகளுக்கு எளிதாக விடை கொடுக்க முடியும்.

குழுக்கள்:

பொருளாதார வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி உலக நாடுகளுடன் இந்திய வளர்ச்சியின் போக்கு, பொருளாதார வளர்ச்சிக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அமைப்புகள், குழுக்கள், போன்றவற்றினை தெரிந்து அந்த குழுக்களின்  ஆராய்வையும் குறிப்புகளாக படித்து தேர்வில் பய்னபடுத்த வேண்டும்.  

சார்ந்த பதிவுகள்:

சுற்றுசூழலியல் பாடம் படிப்போம் ஐஏஎஸ் முதன்மை தேர்வில் வெற்றி பெறுவோம்

English summary
the article tells about Upsc economics Prelims test

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia