ஐஏஎஸ் லட்சியப் போட்டி தேர்வுக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

Posted By:

ஐஏஎஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க இறுதி தேதி ஆகும்.
ஐஏஎஸ் கனவை அடைய இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்துங்கள் தேர்வை வெல்ல சில டிரிக்குள் அதனை பாலோ பண்ணுங்க. அத்துடன் தேர்வை வெல்ல நன்றாக படித்தலுடன், ரிவிசன் மற்றும் டெஸ்ட்கள் இவை முன்றையும் சரியாக பின்ப்பற்றினால் தேர்வை எளிதாக வெல்லலாம்.

கனவு தேர்வு :

ஐஏஎஸ் தேர்வானது 24 பணியிடங்களை கொண்ட இந்தியாவின் பல்வேறு பிரிவு நிறுவாகங்களுக்காக வைக்கப்படும் தேர்வாகும். அவற்றில் ஐஏஎஸ் பதவி முதலிடம் வகிக்கும் இது நாட்டிலுள்ள மாவட்டங்களின் ஒட்டு மொத்த நிறுவாகத்தை கவனிக்கும் பொறுப்பாகும்.

அதேபோன்று இரண்டாம் இடத்திலுள்ள ஐபிஎஸ் இந்தியன் போலீஸ் சர்வீஸ் என அழைக்கப்படும் இத்துறையில் வேலை வாய்ப்பு பெறுவதும் அந்த காக்கி உடையை கம்பீரமாக அணிய வேண்டி பலர் அரும்பாடுபட்டு இலக்கை அடைந்துள்ளனர்.

ஐஆர்எஸ் பதவியானது இந்திய சுங்கத்துறை குறித்து அனைத்து நடவடிக்கைள் அதாவது கஸ்டம்ஸ் என அழைக்கப்படும். வருவாய் குறித்து பணியாற்றும் இவ்வாறு பாண்டிசேரி பிரிவு பணியிடம் மொத்தம் 24 பணியிடங்கள் கொண்டது இந்திய ஆட்சிப்பணி ஆணையம் ஆகும்.

இந்த கனவு தேர்வை வெல்ல வேண்டும் என நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதுவார்கள். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் தேர்வுகள் அனைத்தும் மத்திய அரசின் கீழ் செயல்படும் மத்திய ஆட்சிப்பணி ஆணையம் நடத்தும்.

 

மத்திய ஆட்சிப்பணி ஆணையம் :

மத்திய ஆட்சிப்பணி ஆணையமானது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1854 இல் அறிமுகப்படுத்தப்பட்டு 1855 முதல் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது முதன் முதலில் சிவில் சர்வீஸ் தேர்வானது லண்டனில் நடத்தப்பட்டது. அப்பொழுது தேர்வு எழுத அதிகபட்சம் 23 வயது குறைந்த பட்சம் 18 வயதுடையோர் இந்த தேர்வை எழுதினார்கள்.

சிவில் சர்வீஸ் தேர்வை முதன் முதலில் எழுதி வெற்றி பெற்ற இந்தியர் சத்தியேந்திரநாத் தாகூர் இவர் ரவிந்திரநாத் தாகூரின் சகோதரர் ஆவார். அவருக்கு பின் நாங்கு பேர் இந்த தேர்வை எழுதி வெற்றி பெற்றர்கள். சிவில் சர்வீஸ் தேர்வானது 1933 முதல் இந்தியாவில் அலகாபாத்தில் எழுதுவதற்கு ஆரம்பமானது பிறகு டெல்லியில் பெடரல் பப்ளிக் சர்வீஸ் கமிசன் என்னும் அமைப்பின் கீழ் லண்டனிலிருந்து தேர்வு நடத்தப்பட்டது. இவ்வாறு பலநிலைகளை கடந்து 1950, ஜனவரி 26க்குப்பின் இந்திய சட்டவிதி 378ன் படி மத்திய ஆட்சிப்பணி ஆணையமாக மாற்றம் பெற்றது.

இவ்வாறு பல நிலைகளை கடந்து இந்தியாவில் யூபிஎஸ்சி வலிமை பெற்று நிர்க்கின்றது. இந்த தேர்வை எழுத பலர் உத்வேகமாக உள்ளனர். பலருக்கு இது குறித்து விழிப்புணர்வு குறைவு, நாடெங்கிலும் யூபிஎஸ்சி தேர்வு குறித்து தெரிந்து கொண்டு தேர்வுக்கு படிக்க பலர் ஆர்வமாக பள்ளி மற்றும் கல்லுரி காலங்களிலேயே படிக்க தொடங்குகின்றனர். இந்த கனவு தேர்வை வெலவது எவ்வாறு , மற்றும் கனவு தேர்வு என்பது குறித்து அடிப்படை முதல் தேர்வில் வெல்வது வரை அனைத்தையும் தெரிந்து கொண்டு தேர்வை வெற்றி பெறுங்கள்.

 

சிவில் சர்வீஸ் தேர்வு அறிமுகம்:

சிவில் சர்வீஸ் தேர்வானது ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்எஸ் போன்ற நாட்டின் நிர்வாக பிரிவுகளுக்காக அரசு ஒவ்வொரு ஆண்டும் யூபிஎஸ்சி என்ற தேர்வாணையம் மூலம் நாடு முழுவதும் உள்ள தேர்வர்களுக்கு தேர்வு நடத்துகின்றது.

சிவில் சர்வீஸ் மூன்று நிலைகள்:

சிவில் சர்வீஸ் தேர்வானது பிரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் எனப்படும் முக்கிய தேர்வு மற்றும் இண்டர்வியூ தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மூன்று நிலைகளை கடந்து வெற்றி பெற வேண்டும். பிரிலிம், மெயின்ஸ் மற்றும் இண்டர்வியூ  இவற்றில் எந்த நிலையில்    தோற்றாலும் மீண்டும் தேர்வுக்கு அடுத்தாண்டு தான் எழுத முடியும்.

சிவில் சர்வீஸ் முதன் நிலை பிரிலிம்ஸ்:

சிவில் சர்வீஸ் தேர்வானது பிரிலிம்ஸ் எனப்படும் முதன் நிலை தேர்வானது இரண்டு தாள்களை கொண்டது. முதல் பொது அறிவு கேள்விகள், இரண்டாம் தாள் சி சாட் என அழைக்கப்படும் சிவில் சர்வீஸ் ஆப்டியூட் கேள்விகள் கொண்டது இரண்டாம் தாள் கொண்டது.

கேள்விகள் :

சிவில் சர்வீஸ் தேர்வானது இரண்டு தாள்கள் கொண்டது. முதல் தாளான பொது அறிவுத் தாள் 100 கேள்விகளை கொண்டது. இரண்டாம் தாள் ஆப்டியூட் டெஸ்ட் 80 கேள்விகள் கொண்டது.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான தேர்வு காலம் :

சிவில் சர்வீஸ் தேர்வுக்கான கால அளவு 2 மணி நேரம் என இருதாளுக்கு மொத்தம் 4 மணி நேரம் இடைவெளி விட்டு நடத்தப்படும். சிவில் சர்வீஸ் தேர்வில் நெகடீவ் மார்க் உண்டு. மூன்று கேள்விகளுக்கான விடை தவறானால் ஒரு சரியான பதிலுக்கான மதிபெண்கள் குறைக்கப்படும். யூபிஎஸ்சியின் சிவில் சர்வீஸ் தேர்வின் பிரிலிம்ஸ் தேர்வில் பொது அறிவுத்தாளில் மொத்தம் மொத்தம் 100 கேள்விகள் இருக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 2 மதிபெண்கள் மொத்தம் 200 மதிபெண்கள் ஆகும்.
சிசாட் தேர்வின் மொத்தம் 80 கேள்விகள் அவற்றில் ஒவ்வொரு சரியானவிடைக்கும் 2.5 மதிபெண்கள் மொத்தம் 200 மதிபெண்களுக்கு விடையளிக்க வேண்டும்.

பொது அறிவு மற்றும் சிசாட் பேப்பர்கள்:

யுபிஎஸ்சி பிரிலிம்ஸ் தேர்வுக்கு பொது அறிவு பாடத்தில் 1000 கேள்விகள் இந்திய அரசியல் அமைப்பு, இந்திய வரலாறு, அறிவியல், சுற்றுசூழலியல், பொருளியல், நடப்பு நிகழ்வுகள் அடங்கிய கலவையாக கேள்விகள் இருக்கும்.
இதன் மொத்த கலவையாக 100 கேள்விகள் கேட்கப்படும்.

கேள்விகள் தயாரித்து தேர்வு நடத்துவது அனைத்து வேலைகளையும் யூபிஎஸ்சி நடத்துகின்றது. பொது அறிவு பகுதியில் 80 முதல் 90 கேள்விகள் சரியாக வெற்றி பெற்றவர்கள் மார்க் செய்துள்ளனர்.

சீசாட் பேப்பரில் மொத்தம் 80 கேள்விகள் அவற்றில் 25 முதல் 35 வரை ஆப்ஸ் மற்றும் 15 முதல் 20 கேள்விகள் காம்ரிகன்சன் 5 கேள்விகள் முடிவெடுத்தல் அத்துடன் 20 கேள்விகள் ரீசனிங் பகுதியிலிருந்து கேட்கப்படும். இதில் எண்ணிக்கையில் மாற்றம் இருக்கலாம் ஆனால் இங்கு கூறியுள்ளபடிதான் கேள்விகள் இருக்கும்.

 

சீசாட் தகுதி தேர்வு:

சிசாட் தாளில் யூபிஎஸ்சி சீசாட் தேர்வுக்கு தகுதியாக 33% மேல் எடுக்க வேண்டும் என யூபிஎஸ்சி தெரிவிக்கின்றது 33% கேள்விகளுக்கு மேல் சரியாக இருக்கும் பொழுது அதனை தகுதி தேர்வாக யூபிஎஸ்சி கருதுகின்றது. யூபிஎஸ்சி சீசாட் என்பது பலரின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கின்றது.

சார்ந்த பதிவுகள்:

ஐஏஎஸ் இண்டர்வியூ கேள்விகள் சார்ப்பான பதில்கள்

English summary
Article tells tips for IAS Exam

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia