"கேட்" தேர்விற்கான சில எளிய டிப்ஸ்!

Posted By:

சென்னை : காமன் அட்மிஷன் தேர்வு எனப்படும் சிஏடி தேர்வு தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வாகும். சிஏடி தேர்வு (ஐஐஎம்) இந்திய மேலாண்மை கழகம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல முன்னணி கல்வி நிறுவனங்களில் மேற்படிப்பில் (முதுகலை) சேருவதற்காக நடத்தப்படும் தேர்வாகும். இந்தத் தேர்வினை (ஐஐஎம்) அகமதாபாத் இந்திய மேலாண்மை கழகம் நடத்துகிறது.

சி.ஏ.டி தேர்வு - டிப்ஸ்

1, திட்டமிடுதல் - முதலில் சி.ஏ.டி தேர்விற்கு தயாராவதற்கென ஒரு திட்டமிடுதல் கட்டாயம் இருக்க வேண்டும். நாம் எதை செய்வதற்கு முன்பும் அதை திட்டமிட்டு செய்வது நல்லதாகும். முழு பாடத்திட்டத்தையும் குறிக்கும் வகையில் ஒரு அட்டவணை தயார் செய்ய வேண்டும். அந்த அட்டவணையில் எந்த நேரம் எதைப் படிக்க வேண்டும் எனத் தெளிவாக திட்டமிட்டு வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் அட்டவணை தயார் செய்த பிறகு அதன் படி கட்டாயம் படித்து முடித்த பின்பே படுக்கைக்குச் செல்ல வேண்டும்.

2, நேரம் மேலாண்மை - சி.ஏ.டி தேர்விற்கென்று அதிகம் நேரம் ஒதுக்கிப் படிக்க வேண்டும். முதன் முறை தேர்வு எழுதுபவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகம் நேரம் எடுத்துப் படிக்க வேண்டும். தேர்வில் மூன்று பகுதியிலிருந்து கேள்விகள் கேட்கப்படும. முதல் பகுதி - தரவு விளக்கம் மற்றும் தர்க்க ரீதியான காரணங்கள் , இரண்டாம் பகுதி - அளவு சார்ந்த திறன், மூன்றாம் பகுதி - வாய்மொழித்திறன் மற்றும் படித்தல் காம்ப்ரஹென்சன் ஆகிய மூன்று பகுதியிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மணி நேரம் விகிதம் 3 பகுதிக்கும் மூன்று மணி நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறித்த நேரத்திற்குள் தேர்வை எழுதி முடிப்பதற்கு நேரம் மேலாண்மை மிகவும் முக்கியமானதாகும்.

3, மாதிரி வினாத்தாள் பயிற்சி - சி.ஏ.டி தேர்விற்குரிய மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாக் டெஸ்ட்டினை எழுதிப் பார்க்க வேண்டம். அப்படி எழுதிப் பார்க்கும் போது எந்தப் பகுதியிலிருந்து அதிகம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. நேரம் போதுமான அளவு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் அன்றாடம் பத்திரிக்கைகளில் வரும் நிகழ்வுகள் பற்றியும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. சி.ஏ.டி தேர்வு சம்பந்தப்பட்ட பல புத்தகங்களையும் வாங்கி படிப்பது நல்லது. ஓரிரு புத்தகத்தோடு படித்து முடித்து விடாமல் உங்களால் முடிந்தவரை அதிக புத்தகங்களை ரெஃபர் செய்து படிக்க வேண்டும். எவ்வளவு தகவல்களை அறிந்து கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு தேர்வு சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.

4, முறைபடி தயாராகுதல் - சி.ஏ.டி தேர்விற்கான பாடத்திட்டங்களை நன்கு அறிந்து கொண்டு அதற்கேற்றாற் போல் தயாராக வேண்டும். முதலில் பாடத்திட்டங்களில் உள்ளவற்றை முறைப்படி படித்து தயாராகி விட்டு பின்பு மேலும் பிற தகவல்களை அறிந்து கொள்வது நல்லது.

5, பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிதல் - சி.ஏ.டிக்கு மூன்று பகுதியிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். மூன்று பகுதிகளில் உங்களுக்கு எது கொஞ்சம் கடினமானதாக உள்ளதோ அந்தப் பகுதிக்கு அதிகம் நேரம் ஒதுக்கி படியுங்கள். மாதிரித் தேர்வினை நீங்கள் தினமும் எழுதிப் பாருங்கள் அது உங்கள் நேரம் மேலாண்மை மற்றும் அறிவுத் திறன் அதிகரிக்க உதவியாக இருக்கும்.

6, ஆளுமை மேம்பாடு - மாணவர் தங்கள் ஆளுமையை மேம்படுத்த வேண்டும். ஆங்கிலம் மற்றும் ஆங்கில இலக்கணம் பகுதிகளில் உங்கள் ஆளுமை திறனை அதிகரித்துக் கொள்ள வேண்டும். தினமும் ஆங்கில செய்தித்தாள் மற்றும் நாவல்கள் போன்றவைகளைப் படிக்கும் போது உங்களது ஆளுமை திறனை அதிகரித்துக் கொள்ள முடியும்.

7, ஆய்வு பொருள் (ஸ்டடி மெட்டீரியல்) - சி.ஏ.டித் தேர்விற்கான ஸ்டடி மெட்டீரியல்களை வாங்கிப் படிக்க வேண்டும். மேலும் அது சம்பந்தப் பட்ட அனைத்து தகவல்களையும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும. பழைய வினாத்தாள்களை டெய்லியும் எழுதிப் பார்கக வேண்டும். அது உங்களுக்கு தேர்வை சிறப்பாக எழுதுவதற்கு உதவியாக இருக்கும்.

8, நிறைய பயிற்சி - சி.ஏ.டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களே நீங்கள் அதிகம் மாக் டெஸ்ட் எழுதி நிறைய பயிற்சியை மேற்கொள்ளும் போது அது உங்களுக்கு ஏற்படும் சிக்கலைத் தவிர்க்கும். நேரம் மேலாண்மையை அதிகரிக்கும். உங்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். நீண்ட காலப் பயிற்சி உங்களை அதிகம் மதிப்பெண் பெறச் செய்யும்.

9, நம்பிக்கையாக படித்தல் - நீங்கள் தேர்விற்கு படிக்கும் போது நம்பிக்கையுடன் தயாராக வேண்டும். படிப்பதை கவனமாகவும் நம்பிக்கையாகவும் படிக்க வேண்டும். பல்வேறு விதமான மாதிரி வினாத்தாள்களை எழுதி எழுதிப் பார்க்கும் போது உங்களுக்கு நம்பிக்கை தானாக வந்துவிடும். விடா முயற்சி செய்து படியுங்கள்.

10, மறுபார்வை - தேர்வு நெருங்கும் நாட்களில் புதிய தலைப்புகளில் எதையும் படிக்காதீர்கள். நீங்கள் ஏற்கெனவே படித்து முடித்து விட்டவற்றை நன்கு ரிவிசன் விடுங்கள். செய்தித்தாள்கள் படிப்பதை நிறுத்தாமல் தினமும் படித்து விடுங்கள். நீங்கள் படித்ததை ரிவிசன் செய்யும் போது அது உங்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரும் .

English summary
Indian Institute of Management (IIM), Ahmedabad is all set to conduct the Common Admission Test (CAT) 2015 and candidates candidates have to prepare according to the pattern.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia