ஜெஇஇ தேர்விற்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?

Posted By:

டெல்லி: ஜெஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசாங்கம் மற்றும் மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) நடத்தப்டும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும்.

ஜெஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வு என்பது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசாங்கம் மற்றும் மத்திய மேல்நிலை கல்வி வாரியத்தால் (சிபிஎஸ்இ) நடத்தப்டும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாகும். நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (என்ஐடி), ஐஐடிகள் உட்பட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் உள்ள என்ஜீனியரிங் படிப்பில் சேருவதற்காக இந்தத ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்சாம் நடத்தப்படுகிறது. இது ஜெஇஇ மெயின் தேர்வு மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது.

ஜெஇஇ தேர்விற்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?

2017ம் வருடத்திலிருந்து 12ம் வகுப்பு மார்க்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என சிபஎஸ்இ அறிவித்துள்ளது. மேலும் 12ம் வகுப்பில் பொதுப் பிரிவைச் சார்ந்த மாணவர்கள் 75% மார்க்கும், எஸ்சி, எஸ்டி பிரிவைச் சார்ந்த மாணவர்கள் 65% மார்க்கும் பெற்றிருக்க வேண்டும் அல்லது மெரிட் லிஸ்ட் அடிப்படையில் முதல் 20%க்குள் மார்க் எடுத்தவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் எனவும் அடிப்படைத் தகுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெஇஇ தேர்விற்கு விண்ணப்பிற்கும் முறையைக் கீழேக் காண்போம்.

முதல் தாள் (paper - 1) தேர்வு ஆன் லைன் முறை மற்றும் ஆப் லைன் முறை ஆகிய இரண்டு முறைகளிலும் நடத்தப்படுகிறது.

இரண்டாவது தாள் (paper - 2) ஆப் லைன் முறையில் நடத்தப்படும் தேர்வாகும். அதாவது பேப்பர் மற்றும் பேனாவைப் பயன்படுத்தி எழுகின்ற எழுத்துத் தேர்வாக மட்டுமே இரண்டாவது தாள் தேர்வு நடத்தப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் முதல் தாள் தேர்வை ஆன் லைனிலும் எழுதலாம் அல்லது ஆப் லைனிலும் எழுதலாம். ஆனால் ஏதாவது ஒரு முறையை மட்டுமே பயன்படுத்தி தேர்வை எழுத வேண்டும். நீங்கள் ஜெஇஇ தேர்விற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். உங்களுடைய விண்ணப்பப் படிவத்தில் கட்டாயம் நீங்கள் ஆன்லைனில் தேர்வு எழுதப் போகிறீர்களா அல்லது ஆப் லைனில் தேர்வு எழுதப் போகிறீர்களா என்பதனைக் குறிப்பிட வேண்டும்.

ஜெஇஇ மெயின் தேர்வு மற்றும் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு இரண்டு தேர்விற்கும் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வு எழுத முடியும். (இது ஐஐடியில் சேருவதற்காக எழுதப்படும் தேர்வாகும்) விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது கவனமுடன் விண்ணப்பியுங்கள்.

ஜெஇஇ மெயின் என்ற இணையதளத்தில் ஆன்லைன் அப்ளிகேஷன் பார்ம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஜெஇஇ மெயின் தேர்விற்கு மாணவர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

மத்திய இடஒதுக்கீடு வாரியம் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி (என்ஐடி), ஐஐடிகள் உட்பட மத்திய தொழில்கல்வி நிறுவனங்களில் உள்ள எஞ்னியரிங் படிப்பில் சேருவதற்காக ஜெஇஇ மெயின் தேர்வை நடத்தவிருக்கிறது. ஜெஇஇ மெயின் தேர்விற்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஜெஇஇ மெயின் என்ற இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்கள் தங்களுடைய தனிப்பட்ட தகவல்களை சரியாக பதிவு செய்துள்ளீர்களா என்று ஒரு முறைக்கு இரு முறை சரிப்பார்த்து விட்டு சமர்ப்பிக்கவும். அகில இந்திய ரேங்க் விண்ணப்பதாரர்கள் தங்கள் ரேங்கை சிஎஸ்ஏபி என்ற இணையதளத்தில் பதிவு செய்யவும்.

ஜெஇஇ மெயின் இடஒதுக்கீடு நடைமுறை :

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பாக தாங்கள் விரும்பும் கல்லூரிகள் மற்றும் கிளைகளிலுள்ள இடஒதுக்கீடுப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கவும்.

ஆன்லைன் கவுன்சிலின் போது மாணவர்கள் தங்கள் விருப்பத்தினை மாற்றவும் அழிக்கவும் முடியும். ஆனால் ஒருமுறை சீட்டை லாக் செய்த பின்பு மாற்றம் செய்ய முடியாது. நீங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்கள் விருப்பத்தினை லாக் செய்ய வேண்டும். இல்லையெனில் அதற்கான டெட் லைன் முடிந்தவுடன் அது தானகவே லாக்காகி விடும். எனவே விண்ணப்பதாரர்கள் மிகவும் கவனமுடன் ஆன்லைன் கவுன்சிலின் போது உங்கள் விருப்பத்தை லாக் செய்ய வேண்டும்.

உங்கள் விருப்பத்தினை லாக் செய்த பிறகு கட்டாயம் அதனைப் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மேலும் இதில் விதிமுறைகள் மற்றும் விண்ணப்பதாரரின் ஒப்புதல் ஆகியவைகள் அடங்கியிருக்கும். இதனை சேர்க்கை மையம் அல்லது ஒதுக்கப்பட்ட நிறுவனங்களில் கையொப்பம் இட்டு சமர்ப்பிக்க வேண்டும்.

பதிவுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் உங்கள் விருப்பத்தினை லாக் செய்யாமல் விட்டிருந்தால் உங்களுக்கான சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீடு மறுக்கப்படும். ஆயினும் மூன்றாவது சுற்றிற்குப் பின்பு அவர்களுக்கு தங்கள் விருப்பத்தினை லாக் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படும். அவர்கள் நான்காவது சுற்றில் கலந்து கொள்ளலாம். மறுபடியும் தங்கள் விருப்பத்தினை மூன்றாவது சுற்றிலும் லாக் செய்யாமல் விட்டு விட்டால் அவர்கள் நான்காவது சுற்றிற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். நான்காவது சுற்றில் இடம் பெறாதவர்கள் அந்தந்த இடத்தில் நடக்கும் ஸ்பாட் ரவுண்ட் அட்மிஷனில் சரியான நேரத்திற்குள் பதிவு செய்து விட்டால் அவர்கள் கன்சிடர் பண்ணப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் தாங்கள் கொடுத்திருக்கும் தகவல்களில் ஏதேனும் பொய்யான மற்றும் தவறான தகவல்கள் உள்ளன எனக் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை ரத்து செய்யப்படும். சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு முதல் சுற்றில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கான இருக்கை ஒதுக்கீட்டினை சிஎஸ்ஏபி என்ற இணையதளத்தில் காணலாம்.

இட ஒதுக்கீட்டிற்காக அனைத்து விண்ணப்பதாரர்களும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் இட ஒதுக்கீட்டினை ரத்து செய்தாலோ அல்லது அதற்கு செல்ல தவறினாலோ அதனை தங்களின் அறிக்கை மையங்களுக்கு கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தாங்கள் இட ஒதுக்கீட்டிற்காக லாக் செய்த பிரிண்ட் அவுட், தற்காலிக ஒதுக்கீடு கடிதம் வலைதளத்திலிருந்து எடுக்கப்பட்டது மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் ஒரிஜினல் ஆகியவற்றை அறிக்கை மையம் அறிவிக்கும் போது எடுத்துச் செல்ல வேண்டும். ஆன்லைனில் நீங்கள் இடஒதுக்கீட்டிற்காக டெபாசிட் செய்த ரூபாய் நாற்பதாயிரத்திற்கான சான்றினை எஸ்எம்எஸ், பிரிண்ட் அவுட் அல்லது மெயில் மூலம் அறிக்கை மையத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். இந்தக் கட்டணத்தை நீங்கள் ஆன்லைன் செல்லான், டெபிட் கார்டு, கிரடிட் கார்டு மற்றும் நெட் பாங்கின் மூலம் செலுத்தலாம். மேலும் தகவல் பெற www.jeemain.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

English summary
The Ministry of Human Resource Development, Government of India, Notification, the Joint Entrance Examination (Main) will be conducted by the JEE Apex Board for admission to Undergraduate Engineering Programmes in NITs, IIITs and other Centrally Funded Technical Institutions etc.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia