கமாட்-கே நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்று தெரியுமா உங்களுக்கு

காமட்-கே என்னும் நுழைவுத் தேர்வு கர்நாடகா மருத்துவக் கூட்டமைப்பால் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பொறியியல் துறைச் சார்ந்த தனியார் கல்லூரிகளிலுள்ள இடஒதுக்கீட்டிறகாக நடத்தப்படும் 2017ம் ஆண்டி

பெங்களூர் : காமட்-கே என்னும் நுழைவுத் தேர்வு கர்நாடகா மருத்துவக் கூட்டமைப்பால் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பொறியியல் துறைச் சார்ந்த தனியார் கல்லூரிகளிலுள்ள இடஒதுக்கீட்டிறகாக நடத்தப்படும்தேர்வாகும். 2017ம் ஆண்டிற்கான காமட்-கே நுழைவுத் தேர்வு பெங்களூரில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தேசிய அளவில் நடத்தப்படும் தேர்வாகும். மருத்துவம் பல் மருத்துவம் மற்றும் தொழில் நுட்ப கல்லூரிகளில் இளங்கலை முதலாம் ஆண்டில் நுழைவதற்கு காமட்-கே நுழைவுத் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும்.

2017ம் ஆண்டிற்கான காமட்-கே எனப்படும் இளங்கலை நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பதாரர்கள் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதனை கீழேக் காண்போம்.

கமாட்-கே நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்று தெரியுமா உங்களுக்கு

1 விண்ணப்பதாரர்கள் அலுவலக இணையதளத்திற்குச் சென்று காமட்.கே நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்பு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை நன்றாகப் படித்துவிட்டு நிரப்ப ஆரம்பியுங்கள்.

2 விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பக் கட்டணம் ஆன்லைன் விண்ணப்பங்களுடன் சேர்த்து வசூலிக்கப்படுகின்றன. அதில் தேர்வுக்கான கட்டணம், கவுன்சிலிங்கிற்கான கட்டணம், இடைச் செலவினங்களுக்கான கட்டணம் ஆகியவைகள் வசூலிக்கப்படுகின்றன. ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிப்பதற்கு முன்பு ஒரு முறைக்கு இரு முறை நன்றாக சரிப்பார்த்து விட்டு சமர்ப்பியுங்கள். சமர்ப்பித்த பின்பு திரையில் வரும் விண்ணப்ப எண்ணைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

3 விண்ணப்பப் படிவத்தினை A4 தாளில் பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள் அத்துடன் ஆன்லைன் ஆய்வு சான்றிதழையும் பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். பிரிண்ட் எடுப்பதற்கு முன்பு நன்கு சரிப்பார்த்து விட்டு நகல் எடுங்கள். நகல் எடுத்த பின்பு அதில் நீங்கள் இறுதியாகப் படித்த நிறுவனத்தின் தலைவருடைய சான்றொப்பம் பெற வேண்டும். பின்பு அதனை A4 அளவுள்ள உறையில் வைத்து அனுப்ப வேண்டும். உறையை மடிக்கக் கூடாது.

4 முழுவதும் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தினை கீழே உள்ள காமட்-கே அலுவலகத்திற்கு விரைவு அஞ்சல் அல்லது தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

எக்சிகியூட்டிவ் செக்ரட்ரி, காமட்-கே,
நம்பர் 132, இரண்டாவது மாடி, 11வது மெயின் ரோடு, 17வது குறுக்கு, மல்லேஸ்வரம், பெங்களூர் - 560055. கர்நாடகா.

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன் கீழே உள்ள ஆணவங்களையும் சேர்த்து அனுப்ப வேண்டும்.

1 தேசியமையமாக்கப்பட்ட ஏதாவது ஒரு பாங்க்கில் டிடி எடுத்து அனுப்ப வேண்டும். டிடி எடுக்க வேண்டிய முகவரி காமட்-கே (COMEDK) பேயபிள் அட் பெங்களூர் ஆகும். (கட்டாயம் பெங்களூரில் மாற்றத்தக்க டிடியாக இருக்க வேண்டும்) டிடியின் பின் புறத்தில் விண்ணப்பதாரரின் பெயர், மொபைல் நம்பர் மற்றும் விண்ணப்பப் படிவத்தின் எண் (எம்பிபிஎஸ், பிடிஎஸ், பி,இ) ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். டிடியில் கட்டாயம் பாங்க் அதிகாரியின் கையொப்பம் உள்ளதா என சரிப்பார்த்து அனுப்ப வேண்டும். மூன்று பாடங்களுக்கு அதாவது இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம் முதலியவற்றிற்கு Rs. 1200/- கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் தேர்வுக்கான கட்டணமாகும் இத்துடன் பிஇக்கும் சேர்த்து தேர்வு எழுதுபவர்களுக்கு அதாவது இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் கணிதம் ஆகிய நான்கு பாடங்களுக்கும் விண்ணப்பிப்பவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் Rs. 1500/- வசூலிக்கப்டுகிறது.

2 விண்ணப்பப் படிவத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள் அத்துடன் ஆன்லைன் ஆய்வு சான்றிதழையும் பிரிண்ட் எடுத்துக் கொள்ளுங்கள். நகல் எடுத்த பின்பு அதில் நீங்கள் இறுதியாகப் படித்த நிறுவனத்தின் தலைவருடைய சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும். (12ம் வகுப்பு அல்லது 2வது பியூசி)

3 10ம் வகுப்புச் சான்றிதழ் அல்லது பள்ளியில் இருந்து வெளியேறிய சான்றிதழை இணைத்து அனுப்ப வேண்டும் அது விண்ணப்பதாரரின் பிறந்த தேதியை சரிப்பார்ப்பதற்காக பயன்படுத்தப்படும்.

4 கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவைச் சார்ந்தவர்கள் தங்களுடைய பிரிவு சான்றிதழ்களையும் இத்துடன் அனுப்பி வைக்க வேண்டும்.

கவனிக்க வேண்டியவைகள் ;

1, மேலே உள்ள ஆவணங்கள் அனைத்தையும் சரியாக இணைத்து விண்ணப்பப் படிவத்துடன் அனுப்ப வேண்டும். இல்லையெனில் அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
2. டிடியை விண்ணப்பப் படிவத்துடன் சேர்த்து பின் பண்ணுவதைத் தவிர்க்க வேண்டும். கிளிப்யை பயன்படுத்த வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The Consortium of Medical Engineering and Dental Colleges of Karnataka (ComedK), Bangalore, has announced the date for the Undergraduate Entrance Test (UGET) for the year 2017.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X