போட்டி தேர்வுக்கான பொது அறிவு கேள்வி பதில்கள் படியுங்க

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு முடிந்து விட்டது . குரூப் 4 தேர்வுக்கான கேள்விகள் எதிர்ப்பார்த்த அளவிற்குக்கு சவாலாக இருந்தது. நன்றாக தேர்வு எழுதி முடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள். தேர்வில் தவறு செய்து இப்பொழு அதனை அறிந்தவர்களுக்கும் கற்றுக்கொள்ளுங்கள் உங்களுக்கும் வாழ்த்துக்கள். அடுத்த அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுகளுக்கு படிக்க திரும்புங்கள் . நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நடக்கப் போவை நன்மையாக இருக்க வேண்டும்.

 

1. எந்தநாட்டு தலைவரை கௌரவிக்க தில்லியிலுள்ள முக்கியமான சாலைக்கு அவருடைய பெயர் வைக்கப்படுகிறது?

1 ஷேக் முஜிபூர் ரஹ்மான்
2 ஷேக் ஹசினா
3 ஹோசிமின்
விடை: 1. ஷேக் முஜிபூர் ரஹ்மான்
விளக்கம் :

ஷேக் ரஹ்மானை கௌரவிக்கும் வகையில் டில்லியிலுள்ள முக்கிய சாலைக்கு அவருடைய பெயர் சூட்டப்படுகின்றது. கடந்து ஏழு ஆண்டுகளுக்கு பிறகு 2017இல் தான் ஷேக் ஹசீனா இந்தியா வந்தார். அன்பினிஸ்ட் மெமோரியர்ஸ் என்னும் நூலை ஷேக் ஹசீனா எழுதியிருந்தார் அதனை ஹிந்தி பதிப்பை இந்தியாவில் மோடியும், ஹசீனாவும் இணைந்து வெளியிட்டனர்.

 

2.ரயில்வே வார விழா எப்பொழுது கொண்டாப்படுகின்றது?

1. ஏப்ரல் 10 முதல் 16
2. மார்ச் 14 முதல் 20
3.ஜூன் 3 முதல் 8
விடை: ஏப்ரல் 10 முதல் 16
விளக்கம்
: ரயில்வே வாரவிழா ஆண்டுதோறும் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியாவில் 1853இல் மும்மை தானே இடையே முதல் பயணிகள் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இதனை நினைவு கூறும் வகையில் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை ரெயில்வே வார விழா கொண்டாடப்படுகின்றது.

3.பாக்ய லக்ஷ்மி திட்டம் என்றால் என்ன?

1. ஏழை குடும்ப பெண் குழந்தைக்கு கல்வி திருமணத்துக்கும் உதவும் திட்டம்
2. பெண் குழந்தைகளுக்கு திருமணத்திற்கு உதவும் திட்டம்
3. மத்திய அரசின் மகளிர் நலவாழ்வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள திட்டம்
விடை: 1. 1ஏழை குடும்ப பெண் குழந்தைக்கு கல்வி திருமணத்துக்கும் உதவும் திட்டம்
விளக்கம் :
ஏழை குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைக்கும் கல்வி திருமணத்துக்கும் உதவும் வகையில் ரூபாய் 50, 000 வளர்ச்சி நிதிப் பத்திரம் வழங்குவதற்கான திட்டத்தினை உத்திர பிரதேச அரசு அமல்படுத்தியுள்ளது.

4. மன அழுத்த நோயால் பாதித்த குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு உதவும் எனது மகிழ்ச்சி திட்டம் தொடங்கி வைப்பு?

1.  நிம்கேர் தொண்டு நிறுவனம் மன அழுத்தத்தில் இருந்து குழந்தைகள் வெளிவர சென்னையை சேர்ந்த நிம்கேர் நிறுவனம் அறிவிப்பு
2.    சிறுவர் சிறுமியர் விளையாட பூங்கா அமைக்க ஏற்பாடு
3.  குழந்தைகளுக்கான நோயிலிருந்து காக்க மகிழ்ச்சி திட்டம் தொடக்கம்
விடை: 1 நிம்கேர் தொண்டு நிறுவனம் மன அழுத்தத்தில் இருந்து குழந்தைகள் வெளிவர சென்னையை சேர்ந்த நிம்கேர் நிறுவனம் அறிவிப்பு.
விளக்கம் :
நமது நாட்டில் 13 முதல் 15 வயதுக்குட்ப்பட்ட பிரிவில் உள்ள நாங்கில் ஒருபங்கு சிறுவர் சிறுமியர்கள் மன அழுத்தம் என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு சமிபத்தில் நடைபெற்ற ஆய்வின் முடிவுகள் காட்டியுள்ளன.

5. அண்ணப்பூர்ண கேண்டீன் திட்டம் என்றால் என்ன?

1 அண்ணப்பூர்ண கேண்டீன் உணவகமானது ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்காக செய்ல்படுத்தப்படுகின்றது.
2 கேரள அரசின் உணவு வழங்கும் திட்டமாகும்
3 மகாராஷ்டிரா அரசின் ஏழைகளுக்கு உணவு வழங்கும் திட்டம்
விடை: 1. அண்ணப்பூர்ண கேண்டீன் உணவகமானது ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்காக செய்ல்படுத்தப்படுகின்றது.
விளக்கம்
: அண்ணபூர்ணா திட்டமானது உத்திரப் பிரதேச அரசு துவங்கவுள்ள அண்ணபூர்ண கேண்டீன் உணவகமானது ஏழைகள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினருக்காக செய்ல்படுத்தப் படுகின்றது.

காலை உணவு ரூபாய் 3க்கும் மதிய உணவு தலா ரூபாய் 5க்கும் என 3 வேளை உணவும் சேர்ந்து 13க்கு வழங்கப்படும்.

 

6. எச்ஐவி கண்டறியும் ஆய்வுகள் எவை?

1. டிபி டெஸ்ட் மூலம் கண்டறிதல்
2. எடை குறைவு மூலம் கண்டறிதல்
3. எலைசா ,வெஸ்டான் பிளாட் உறுதிப்படுத்தும் ஆய்வு

விடை:3 எலைசா வெஸ்டான் பிளாட் உறுதிபடுத்தும் ஆய்வு
விளக்கம் :
குறிப்பிடத்தக்க எடைக்குறைவும் கடும்பேதி தொடர்ச்சியான காய்ச்சல் கேண்டியாசிஸ் ஹெர்ப்ஸ் சூஸ்டர் என்னும் வைரஸ் தாக்கம் மற்றும் டிபி போன்ற ஹெச்ஐவிக்கான சந்தர்ப்பவாத நோய்கள் உருவாதல்

 

7. உதான் என்றால் என்ன?

1 பிராந்திய வான்வழி போக்குவரத்தை மேம்படுத்த மேலும் அத்திட்டத்தை மேற்ப்பார்வையிட அமைக்கப்பட்ட குழுவாகும்.

2 நாட்டின் நகரங்கள் அனைத்திலும் உள்நாடு வெளிநாடு பயணிக்க விமான நிலையம் அமைப்பது நோக்கம் ஆகும்.
3 தமிழ்நாடு சென்னை, திருநெல்வேலி, சேலம் புதுச்சேரி இத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளன.
விடை: பிராந்திய வான்வழி போக்குவரத்தை மேம்படுத்த மேலும் அத்திட்டத்தை மேற்ப்பார்வையிட அமைக்கப்பட்ட குழுவாகும்.
விளக்கம் :
வான்வழி திட்டத்தை மேம்படுத்த ஜூன் 15, 2016 அறிவிக்கப்பட்ட ஆர்என் சௌபே குழு உதான் எனப்படும் பிராந்திய வான்வழி போக்குவரத்தை மேம்படுத்த திட்டத்தினை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட குழுவாகும்.

 

8. மகாவீரர் ஞானம் பெற்ற இடம் எது

1. வைசாலி
2. ரிஜீபாலிகா
3. குந்தபுரம்
விடை: 1 வைசாலி
விளக்கம்
: மகாவீரரின் இயர்பெயர் வரத்தமானர் ஆவார். சமண மதத்தை பின்பற்றிய பல்லவமன்னன் முதலாம் மகேந்திர வர்மன் வடக்கு சமணர்களின் தலைவர் ஸ்தூல பத்திரர்

9. சாணக்கியர் எழுதிய ஆட்சி நூல் யாது?

1. அர்த்த சாஸ்திரம்
2. முத்ரா ராட்சசம்
3. தேவி சந்திரகுப்தம்
விடை: அர்த்த சாஸ்திரம்

விளக்கம் : சாணக்கியரின் வேறு பெயர் கௌடியர் ஆவார். இவர் எழுதிய ஆட்சி நூல் அர்த்த சாஸ்திரம் ஆகும். மௌரியர்களின் அரசியல், சமுதாயம், சமயம், மற்றும் பொருளாதாரம் குறித்து அறிய உதவுகிறது. சாணக்கியர் விற்பனை வரியை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்.

 

10. உர்ஜா கங்கா திட்டம்

கிழக்கிந்திய பகுதிகளுக்கு எரிபொருட்களை கொண்டு செல்வதற்காக பிரதான் மந்திரி உர்ஜா கங்கா இயற்க்கை எரிவாயு திட்டத்தின் கீழ் மற்றுமொரு 400 கீமி நீளமுள்ள எரிவாயு குழாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கெயில் இந்தியா நிறுவனம் இதற்கு உத்தரவிட்டுள்ளது. பீகாரின் டோபி முதல் மேற்கு வங்கத்தின் துர்காபூர் வரை 400 கிமீ நீளமுடைய இயற்கை எரிவாயு குழாய் அமைக்கப்படவுள்ளது.

சார்ந்த பதிவுகள்:

குரூப் 4 தேர்வினை வெற்றிகரமாக படிக்கவும் தேர்வை வெல்லவும்.

குரூப் 4 தேர்வுக்கு இன்னும் சில ம ணி நேரங்களே இருக்கின்றன ரிவைஸ் செய்யுங்க தேர்வை வெல்லுங்க

English summary
Article tells about Tnpsc questions for aspiarnts

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia