குரூப்-1 மெயின்ஸ்- மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் நேரம் வழங்கி ஹைகோர்ட் உத்தரவு

Posted By:

சென்னை: தமிழகத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு நடக்க இருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 முதன்மைத் தேர்வினை எழுதும் மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குரூப்-1 மெயின்ஸ்- மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் நேரம் வழங்கி ஹைகோர்ட் உத்தரவு

இந்நேர அவகாசம் தொடர்பாக சென்னை திருமங்கலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ரமேஷ் என்பவரின் மனுவை விசாரித்த நீதிபதி ஹரி பரந்தாமன் இந்த உத்தரவினைப் பிறப்பித்தார்.

அதன்படி, "கடந்த 1993 ஆம் ஆண்டு மாநில சமூக நலத்துறை சார்பில் பிறப்பிக்கப்பட்ட ஆணையின் அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத கூடுதலாக அரைமணி நேரத்திற்கு பதிலாக ஒருமணி நேரம் வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார்.

English summary
TNPSC group-1 main examination starts; Chennai high court ordered one hour extend time for special category people.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia