பொது அறிவு பகுதியினை சமாளிக்க தெரிந்தவர்கள் தேர்வை வெல்லலாம் எளிதாக

Posted By:

டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வுகள் தேர்வை வெல்ல உதவும் பொது அறிவு பகுதிகள் இவற்றை ஆராய்ந்து படிக்க வேண்டும். பொது அறிவு பாடப்பகுதியினை பாடங்கள் அனைத்தும் படித்தல் மிகவும் நன்று அல்லது குறைந்த பட்சம் மூன்று பகுதிகளை படித்தால் கூட தேர்வை வெல்லலாம். தேர்வர்களே சிந்தித்து செயலாற்றுங்கள் உங்களுக்கான இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தேர்வை வெல்லவும்.

பொது அறிவு பகுதியின் வெற்றி சரித்திரம் படைக்க படியுங்கள்

1 கடல் நீரிலிருந்து வணிக ரீதியில் பிரித்து எடுக்க கூடிய உலோகம் எது

விடை: மெக்னீசியம்

2 உள்ளங்கையில் வைக்கும் போது உருககூடிய உலோகம் எது

விடை: பாதரசம்

3 இந்திய அனுசக்தியின் மூன்றாவது நிலை யாது

விடை: தோரியம் - யுரேனியம் 233 சுழற்சி

4 வாயு நிலையில் செயல்படும் பூச்சிக் கொல்லியினை குறிப்பிடவும்

விடை: டைக்ளோரோ பென்சீன்

5 கூட்டாட்சியின் மிக முக்கிய அம்சம்

விடை: அதிகாரப் பங்கீடு

6 ஜனாதிபதியின் பதவிக்கான தேர்தலை நடத்தியவர்

விடை: இந்திய தேர்தல் ஆணையம்

7 புதிய கல்வி கொள்கை முறையான 10 +2+ 3 முறையை அறிமுகப்படுத்தியது

விடை: அ.இ.ஆ.தி.மு.க

8 தமிழ் நாடு அரசுக்கு ஒரு முக்கிய வருவாயினம்

விடை: விற்பனை வரி

9 நாட்டிலேயே முதலாவது கூட்டுறவு சங்கம் எங்கு துவங்கப்பட்டது

விடை : தமிழ்நாடு

10 பொருளாதார திட்டமிடலின் அவசியமானது யாது

தேசிய வருவாயை அதிகரித்தல்

11 பசுமைபுரட்சியின் சாதனை யாது

விடை: உற்பத்தி அதிகரிப்பு , கோதுமை பயிருக்கு அதிகபட்ச பயன்

12 சிட்கோ எதனுடன் தொடர்புடையது

விடை : சிறுதொழில் துறை

13இந்தியாவில் உள்ள பெரிய பொதுத்துறை போக்கு வரத்து நிறுவனம் எது

விடை: ரயில்வே துறை

14 வரவேண்டிய கடன்

விடை: தொட்டு உணரமுடியாத சொத்து

15 பங்கல் திட்டத்தினை தொடர்புடையது

விடை: காப்புரிமை

சார்ந்த பதிவுகள்:

மொழிப்பாடத்தில் வல்லுநத் தன்மையை பெறுங்கள் தேர்வை வெல்லுங்கள்

பொதுத் தமிழ் பாடக்கேள்விகளிய நன்றாக படியுங்கள் தேர்வை வெல்லுங்கள்

English summary
here article tells about TNPSC GS part for aspirants
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia