டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான கேள்வி பதில்கள்

Posted By:

குரூப்4 தேர்வுக்கான நாட்கள் வெகு அருகில் நெருங்கி கொண்டிருக்கின்றது. தேர்வர்களே நல்ல படிச்சிட்டு இருங்கிங்க உங்களுடைய லட்சியத்திற்கான முக்கியத்துவம் அதிகரித்து கொண்டே போகின்றது.

குரூப் 4 தேர்வினை வெற்றிகரமாக தேர்வை முடிக்க தீயாக படித்து கொண்டிருக்கும் உங்களுக்கான சில டிப்ஸ் மற்றும் கேள்வி பதிலகள்.

1. இழைகளின் இராணி

இழைகளின் இராணி என அழைக்கப்படுவது எது
விடை: பட்டுப்பூச்சி

விளக்கம் : தூயப்பட்டு என்பது பட்டுபூச்சியிலிந்து கிடைக்கும் மிருதுவான இழை ஆகும். இது இழைகளின் இராணி என அழைக்கப்படுகின்றது

சீனாவை சேர்ந்த சைலிங்சி பேரரசிதான் முதன் முதலில் பட்டை கண்டுபிடித்தாக நம்ப்படுகின்றது.
உலகின் பட்டு உறுபத்தியில் இராண்டாம் இடத்தில் இந்தியா இருக்கின்றது.
தமிழ்நாட்டில் பட்டு உற்பத்தியானது காஞ்சிபுரம், சிறுவந்தாடு, திருபுவனம், ஆரணி ஆகும்.

 

2. பறவைகளுக்கு எத்தனை பற்கள் உண்டு

விடை: பறவைகளுக்கு பற்கள் கிடையாது

விளக்கம் :
எலிகளுக்கு பற்கள் தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டே இருக்கும்
யானையின் வெட்டு பற்களின் நீட்சியே அதன் நீண்ட தந்தமாகும்
ஒரு சில மனிதர்களுக்கு மட்டுமே 32 பற்கள் இருக்கும்

 

3 ஆரோக்கியமான உணவு முறை என்பது எது

விடை: சரிவிகிதத்தில் உணவு உன்பது

விளக்கம்: சாப்பாடை சரியான அளவிலும் , குறிப்பிட்ட இடைவெளியில் உட்கொள்ள வேண்டும்
ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
நார்ச்சத்து உணவு,பச்சை காய்கறிகள், கீரைகள், தானிய வகைகள், பருவ காலத்தில் கிடைக்கும் கனிகள் போன்றவற்றை தேவைக்கு ஏற்ப சாப்பிட வேண்டும்.

4 உடலில் உள்ள வியர்வை சுரப்பி உடலில் தானகவே உண்டாவது எதற்காக

விடை: உடலில் உள்ள கிருமிகள் வியர்வை மூலமாக வெளியேற்றவே உருவாக்கப்பட்டுள்ளது

விளக்கம்: இயற்கையாகவே மனித உடல் நோய்களிலிருந்து தடுப்பாற்றல் பெற்றுள்ளது . மாறிவரும் சூழலுக்கு ஏற்ப மனித உடலை நோயிலிருந்து காக்க மனிதருக்கு தடுப்பூசிகள் மூலம் காக்கப்படுகின்றனர். தடுப்பூசியானது பிறந்த குழந்தை முதல் 16 வயதுள்ளோர்க்கும் இது பயன்படுகின்றது.

 

 

5 பிசிஜி எந்த நோய்க்கான தடுப்பூசியாகும்,

விடை: காச நோய்க்கான தடுப்பு மருந்து

விளக்கம் : தடுப்பூசிகள் மனித உயிரை நோய்களிலிருந்து காக்கப்படுவதற்கு உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஒபிவி வாய்வழி சொட்டு மருந்து போலியோ எதிர்ப்புக்கு கொடுக்கப்படுகின்றது.

டிபிடி- டிஃப்தீரியா கக்குவான் இருமல் ரண ஜென்னி டெட்னஸ் போன்ற நோய் தடுப்புகளாக இருக்கின்றது

எம்எம்ஆர் தடுப்பு மருந்து - தட்டமை, புட்டாளம்மை, ரூபெல்லா தட்டம்மை

டிடி தடுப்பு மருந்து - ரண ஜண்ணி
மீசல்ஸ் தடுப்பு மருந்து - தட்டம்மை

 

6 சிந்து சம்வெளியின் சிறப்பு என்ன

விடை: நகர நாகரிகம்விளக்கம் 

விளக்கம்: சிந்து சமவெளி நாகரிகம் ஒரு நகர நாகரிகம்

சிந்து நகரங்கள் நன்கு திட்டமிட்டு கட்டப்பட்டன.

இரும்பின் பயன் தெரியவில்லை
தெருக்கள் நேராகவும் அகலமாகவும, கிழக்கு மேற்காகவும் வடக்கு தெற்காகவும் அமைந்த நகரங்கள் ஆகும்.

 

7.கிரிக்கெட் மட்டைகள் செய்யப் பயன்படும் மரம் எது

விடை: வில்லோ

விளக்கம்: மரங்கள் அதன் தன்மைக்கு ஏற்ப பல்வேறு வகையில் உதவிகரமாக இருக்கின்றது. ரயில் படுக்கைகள் செய்ய பயன்படும் மரம் பைன்,
பழ மரங்களிலே நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு.
காகிதம் தாயாரிக்கப் பயன்படும் மரம் யூகலிட்பஸ்

8. எத்தனை மாவட்டங்களை கொண்டது தமிழ்நாடு

விடை: 32

விளக்கம் 1956 ஆண்டு மெட்ராஸ் மாகணம் 13 மாவடட்ங்களோடு உருவானது.
கோவை, கன்னியாகுமரி, மெட்ராஸ், மதுரை, நீலகிரி, வட ஆற்காடு, ராமநாதபுரம். சேலம், தென் ஆர்காடு, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி,

9.கபடி மொத்தம் எத்தனை மாநிங்களின் விளையாட்டாக உள்ளது

விடை: 6

விளக்கம் :
கபடி இந்தியாவின் ஆந்திர பிரதேசம், தெலங்கானா, தமிழ் நாடு, மகாராஷ்டிரா, பீகார், பஞ்சாப், போன்ற மாநிலங்களின் விளையாட்டாக இருந்து வருகின்றது.
கபடி வங்கதேசத்தின் தேசிய விளையாட்டாகவும் பின்ப்பற்றப்படுகின்றது. இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கியாகும்.

10. பிளாசிப் போர் நடைபெற்ற ஆண்டு எது

விடை: 1757

விளக்கம் :

பிளாசி போர் ஜூன் 23, 1757இல் பிரிட்டிஸ் இந்திய கம்பெனியால் பெங்காலின் நவாப்க்கு எதிராக நடத்தப்பட்டது. பிளாசி என்ற இடத்தில் இந்த போரானது நடைபெற்றது.பெங்கால் பாகிராதி நதியின் மீது அமைந்துள்ளது

 

11.டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான திட்டமிட்டல:

பிளானிங் என்பது பக்காவா இருக்க வேண்டும் அதன் மூலமே நாம் மிகச்சிறந்த கட் ஆப் மார்க் பெற முடியும் இப்பொழுதுள்ள நேரத்தை சிறப்பாக பயன்படுத்தவும். தேர்வுக்கு நம்ம கையில் மீதப்பிருப்பது 10 நாட்கள் மட்டும்தான் இந்த 10 நாட்களில் புதியதாக படிக்க எதையும் முயற்சிக்க வேண்டாம். ஏற்கனவே படித்த முக்கியமான பகுதிகளை ரிவைஸ் செய்யுங்கள் போதும்.

ரிவைஸ் நீங்கள் நன்றாக செய்யும் பொழுது நிச்சயமாக தேர்வில் கேள்விகளுக்கு சரியான பதிலை எழுத வைக்கும் அல்லது தவறான பதிலை எலிமினேட் என அழைக்கப்படும் தவிர்க்க வைக்கும்.

 

கொள்குறி விடைகளில் கவனம் தேவை:

குரூப் 4 தேர்வுக்கான அப்ஜெக்டீவ் விடைகளை டிக் செய்யும் போது கவனமாக கேள்விகளை படித்து சரியாக விடைகளை டிக் செய்யுங்கள் சில நேரங்களில் தேர்வு எழுதுவோர்கள் அவசர அவசரமாக அரைகுறையாக படித்து பதிலை டிக் செய்கின்றனர். அப்பொழுது சரியான விடையை தேர்வு செய்வதில் தவறு செய்கின்றன்ர். சிலசமயம் தவறான விடை என தெரிந்தும் கவனமின்மையால் அந்த தவறான விடையை தேர்ந்தெடுக்கின்றனர் கொஞ்சம் கவனமாக செயல்படவும் அது தேர்வில் தவறுகள் குறைக்க உதவும்.  

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு

English summary
this article tells about group 4 questions and answer also tips

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia