குரூப் தேர்வுகளை வெல்ல கேள்வி பதில்களின் தொகுப்பு படியுங்கள்

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு என்பது சாவாலானது ஆனால் முடியாதது அல்ல, டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு மையத்தில் சிறப்பாக நீங்கள் கேள்விகளுக்கான பதில்களை மார்க் செய்ய வேண்டுமானால் அதற்குமுன் டெஸ்ட்கள் நிறைய பங்கேற்க வேண்டும். தற்பொழுதைய காலகட்டங்களில் ஆன்லைன் டெஸ்ட , டெலிகிராம் குழு தேர்வு என குழுக்கள் நிறையவுள்ளன அவற்றில் இணைந்து கேள்விகளுக்கு பதில் கொடுங்கள். மதிப்பிட்டு உங்களை மெருக்கேற்றுங்கள்.

தொடர்ந்து ரிவைஸ் செய்தது சரியா என்பதனை அறிய நாம் சுய பரிசோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டும். போட்டி தேர்வில் வெற்றி பெற வல்லுநர்கள் தெரிவிப்பது என்னவென்றால் பாடங்களின் கன்வென்சனல் அதாவது மரபு வழி அல்லது காண்டெம்பரி நடப்பில் அவற்றின் போக்கு அறிந்து தேர்வர்கள் படிக்க வேண்டும்.

அடுத்த தேர்வுக்கான அறிவிப்பு வருவதற்குள் உங்களை அடிப்படையில் தேர்வுக்கு தயாராக்குங்கள் வெற்றி பெறலாம். கட் ஆப்கள் குறித்து எண்ண ஓட்டத்தில் இருக்கும் இலக்குகளை அடைய திட்டங்களை தொகுத்துப் படியுங்கள் வெற்றி பெறலாம்.

1. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்படட்வர் யார் ?

1. ரவி சாஸ்திரி
2. கவாஸ்கர்
3. சச்சின் டெண்டுல்கர்
விடை: 1. ரவி சாஸ்திரி
விளக்கம் :
இந்திய கிரிகெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ரவிசாஸ்த்திரி நியமிக்கப்பட்டு ஜூலை 12 , 2017இல் அறிவிக்கப்பட்டார். இவர் 2019 உலக கோப்பை போட்டிகள் வரை பயிற்சியாளராக இருப்பார். 1981 முதல் 1992 வரை இந்திய கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி 80 டெஸ்ட்கள் மற்றும் 150 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றவர் ஆவார்.

2. இந்தியாவின் முதலாவது விளையாட்டு அருங்காட்சியகம் எங்கு நிறுவப்பட்டுள்ளது ?

1. பீகார்
2. நியூ டெல்லி
3. கொல்கத்தா
விடை: 2. நியூ டெல்லி
விளக்கம்
: இந்தியாவின் முதலாவது விளையாட்டு அருங்காட்சியகமானது புது டெல்லியில் ஆகஸ்ட் 2017 இல் தொடங்கப்பட்டது. இந்தியவில் விளையாட்டினை பொதுமக்களின் அங்கமாக்குவதே ஆகும். பாரம்பரிய விளையாட்டில் கவனம் செலுத்துதல் மற்றும் சாதனை செய்தல் இதன் நோக்கமாகும். இந்த அருங்காட்சியகத்தில் விளையாட்டு வீரர்கள் பெற்றசாதனை டிராபிகள் வைக்கப்படும். விளையாட்டு நுணுக்கங்கள்    கற்றுகொடுக்கப்படும்.

3. சூரிய கோளின் ஒளி பூமியை அடைய ஆகும் காலம் எவ்வளவு ?

1.  10 நிமிடம்
2. 4 நிமிடம்
3. 8 நிமிடம்
விடை: 3. 8 நிமிடம்
விளக்கம் :
சூரிய குடும்பத்தின் தலைவன் சூரியன் ஆகும். சூரிய குடும்பத்தின் ஒளி மற்றும் வெப்பத்திற்கு மூல ஆதாரம் சூரியன்தான. பூமியிலிருந்து சுமார் 15 கோடி கி.மீ தொலைவில் உள்ளது.

4. ஏழு கண்டங்களில் மிக்பெரியது எது?

1. ஆசியா
2. பசிபிக்
3. அண்டார்டிக்
விடை:1. ஆசியா
விளக்கம்
: ஏழு கண்டங்களில் மிகப் பெரியது ஆசியா. இது பூமியின் வட அரைகோளத்தில் அமைந்துள்ளது. நாம் வாழும் இந்தியா ஆசியா கண்டத்தில் உள்ளது. கோபி குளிர்பாலைவனம், உயரமான இமயமலைத் தொடர் முதலியவை இக்கண்டத்தில் உள்ளன.

5. மாளவிக்காக்னி மித்திரம் எழுதியது யார்?

1. ஆரயப்பட்டர்
2. காளிதாசர்
3. அமரகோசர்
விடை: 2. காளிதாசர்
விளக்கம்
: காளிதாசர் எழுதிய மாளவிகாக்னி மித்ரம் சுங்க அரசரின் வரலாறு பற்றி கூறுகின்றது. காளிதாசர் எழுதிய மற்ற நூல்களுள் சாகுந்தல நாடகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். ரகு வம்சம் ராமர் வரலாறு பற்றி கூறுகின்றது.

6. நாலந்த பல்கலைகழகத்தின் தலைவராக இருந்தவர் யார் ?

1. சீலபத்திரர்
2. தர்மபாலர்
3. பாணப்பட்டர்
விடை: 2. தர்மபாலர்
விளக்கம்
: நாலந்தாவின் தலைவர் தர்ம பாலர் இருந்தார் இதன் தத்துவ பேராசிரியராக இருந்துவந்தவர் காஞ்சியை சேர்ந்த தர்மபாலர் ஆவார். மதச்சண்டையில் இது அழிந்தது.

7. தனி நபர் சத்தியாகிரகத்தை தொடங்கியவர் யார்?

1. ஆச்சாரியா வினோபாவே
2. சர் ஸ்டாபோர்டு கிரிப்ஸ்
3. ராஜாஜி
விடை: 1. ஆச்சாரியா வினோபாவே
விளக்கம்
: தனிநபர் சத்தியாகிரகப் போராட்டம் தொடர்பான தீர்மானம் லாகூர் மாநாட்டில் மார்ச் 23ல் நிறியவேற்றப்பட்டது. பிற்காலத்தில் இதனையே பாகிஸ்தான் நாள் என கொண்டாடப்படுகின்றது.

8. சட்டவிதி 110 எத்னைப் பற்றி தெரிவிக்கின்றது?

1. பணமசோதா
2. மசோதாகளுக்கு ஒப்புதல் வழங்குதல்
3. பாராளுமன்றத்தில் பயன்படுத்தப்படும் மொழி
விடை: 1. பணமசோதா
விளக்கம்
: 109 பணமசோதா குறித்த சிறப்பு செயல்முறைகள் குறித்து சட்ட விதிகள் மற்றும் 110 பண மசோதாவின் வரையறை பற்றியது.

9. மேரா கவுன் மேரா காரவ் என்பது எதனை குறிக்கின்றது?

1. விவசாயிகளுக்கு டெக்னாலஜி தொடர்பான அனைத்து உதவிகளையும் வழங்குகின்றது
2.  கிராம வளச்சியை பற்றி தெரிவிக்கின்றது
3.  தேசிய நெடுஞ்சாலைகளை பற்றி குறிக்கின்றது
விடை: 1. விவசாயிகளுக்கு டெக்னாலஜி தொடர்பான அனைத்து உதவிகளையும் வழங்குகின்றது
விளக்கம்
: விவசாயிகளுக்கு புதிய கண்டுப்பிடிப்புகளை பற்றி தெரிவிக்கின்றது. இது  அறிவியல் கண்டுப்பிடிப்புகள் இந்தியன் கவுன்சில்கள், பல்கலைகழகங்கள் குறித்து தெரிவிக்கின்றது.

10. பளப்பளப்பும் வெப்ப மின்கடத்தலும் திறனும் கொண்ட தனிமங்கள் எது ?

1. உலோகங்கள்
2. அலோகங்கள்
3. கிராபைட்
விடை: 1. உலோகங்கள்
விளக்கம்
:பளப்பளபாக வெப்பத்த்தை கடத்தும் திறனும் கொண்டு உலோகங்கள் காணப்படுகின்றன. நம் உடம்பிலுள்ள செல் உள்திரவத்தால் அதிகமுள்ள உலோகம் பொட்டாசியம் ஆகும்.

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளுக்கான கேள்விகளின் தொகுப்பு படிங்க வெற்றி பெறுங்க 

குரூப் தேர்வுகளில் வெல்ல எளிய வழியாக கேள்வி தொகுப்புக்கள் படியுங்கள்

English summary
the article tells about Tnpsc questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia