குரூப் 4 தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிங்க எக்ஸாம் ரொம்ப பக்கத்தில வந்துருச்சு

Posted By:

குரூப் 4 தேர்வுக்கான மாற்றங்களை பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம். குரூப் தேர்வுக்கான மாற்றங்களை தேர்வு எழுதுவோர்கள் அறிந்திருப்பீர்கள். குரூப் 4 தேர்வுக்கான போட்டி தேர்வுக்கு இன்னும் கையில் முழுசாக பத்து நாட்கள் கூட முழுமையாக இல்லை.

ஜாக்பாட் மாறி இந்த வாய்ப்பை பயன்படுத்துங்க நிச்சயமாக கேள்விகள் எளிதாகத்தான் இருக்கும் ஆனால் எக்ஸாம் செண்டரில் நீங்கள் குழம்பாமல் இருத்தலே உங்களுக்கான கட் ஆப்பை கடகடவென உயர்த்த முடியும். நல்ல பயிற்சியும் டெஸ்ட் நன்றாக எழுதுங்கள் தேர்வை எளிதாக சமாளிக்க முடியும்.

டிஎன்பிஎஸ்சியி அட்மிட் கார்டுகள் டவுன்லோடு செய்யுங்கள்,  அட்மிட் கார்டினை டவுன்லோடு செய்து இப்போதே உங்கள் ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையம் அமைந்துள்ள இடத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வரவும்.
தேர்வு நாளில இடம் தெரியாமல் குழம்பி தேர்வுக்கு தாமதமாக சென்ற நிகழ்வுமுண்டு. இதனை தவிர்க்க தேர்வு மையம் குறித்து முன்னமே தெரிஞ்சு வையுங்க தேர்வுக்கு சரியா டைமுக்கு  செல்லவும்.

1 ஐ.நா மாசுபாடு அச்சுறுத்தலுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் உலகின் ஐந்து நகரங்களில் அங்கிகரிக்கப்பட்ட இந்தியா நகரம் எது

1 ஆலப்புழா
2 ஊட்டி
3 சிம்லா
4 மும்பை

விடை: 1. ஆலப்புழா

விளக்கம் : கிழக்கின் வெனிஸ் என அழைக்கப்படும் ஆலப்புலா 2017 ஆம் ஆண்டு யுனெஸ்கோவினால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. ஆழப்புலா சிறப்பான திடக்கழிவு மேலாண்மை அமைப்புக்காக இந்த சிறப்பினை பெற்றுள்ளது. கேரளாவின் ஆலாப்புழா உலகின் ஐந்து மாதிரி நகரங்களில் ஒன்றாக யுஎன்னோவால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

 

 

2 உலகின் மிகப்பெரிய படகு விமானம் எந்த நாட்டுடையது

1 சீனா
2 பிரான்ஸ்
3 ஜப்பான்
4 பிரான்ஸ்

விடை: 1 சீனா

விளக்கம்:

சீனா நாடு முதல் முறையாக நீரிலும் நிலத்திலும் தரையிரங்கும் உலகின் மிகப்பெரிய விமானத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

நீரிலும் நிலத்திலும் தரையிரங்கும் விமானத்தின் பெயர் குன்லாங்

குன்லாங்கின் முதல் சோதனை ஓட்டம்24.12.2017 ஆகும்
சீனாவின் ஜின்வான் விமான நிலையத்தில் துவங்கியது.

 

3. 1500 ஆண்டுகால பழமையான சீனாவின் சில்க் ரூட் என அழைக்கப்படும் பட்டுபாதையில் தற்பொழுது பங்கேற்கும் நாடு

1 இந்தியா
2 ஆப்கான்
3 இலங்கை
4 மியான்மார்

விடை: 2. ஆப்கான்

விளக்கம் :
விளக்கம் : சீனாவின் 1500 ஆண்டுகள் செயல்பட்டு வந்த பட்டுப்பாதை திட்டத்தை மீண்டும் சீனா ஒரே மண்டலம் ஒரே பாதை என்ற பெயரில் புதிய திட்டத்தை செயலபடுத்தி வருகின்றது. சீனா இலங்கை , மியான்மார், நாடுகளில் பட்டுப்பாதை திட்டத்தில் ஆப்கானிஸ்தானையும் இணைக்க திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றது.

 

4. உலகின் நீணட கண்ணாடிப் பாலம் எங்கு திறக்கப்பட்டுள்ளது

1 ரஷ்யா
2 நேபால்
3 சீனா
4 மலேசியா

விடை: சீனா

விளக்கம் : சீனாவின் ஷிஜியாஷூவாங் என்ற உலகின் உயரமாண மற்றும் நீண்ட கண்ணாடிப்பாலம் திறக்கப்பட்டுள்ளது.

இந்த பாலமானது 488 மீட்டர் நீளமும் இரண்டு மீட்டர் அகலமும் நீண்டுள்ளது.

ஹாங்யுகு சுன்னிக் பகுதியில் 218 மீட்டர் உயரத்தில் இரண்டு செங்குத்தான பாறைகளுக்கு இடையே பள்ளத்தாக்கு மேலே கட்டப்படுள்ளது.

 

 

5 நடமாடும் ரோபோ போலீஸ் அறிமுகப்படுத்தப்பட்ட நகரம் எது

1 ஐதராபாத் நகரம்

2 மும்பை

3 கொல்கத்தா

4 பெங்களூர்

விடை: ஐதராபாத்

விளக்கம் :
தாய்லாந்தின் அமிகோ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது. தெலுங்கானா அரசின் தொழில்நுட்ப துறை முதண்மைச் செயலர் ஜெயயேஷ் ரஞ்சன் இந்த ரோபோவை அறிமுகப்படுத்தினார்.

 

6 தேசிய மருத்துவமணை ஆணைய மசோதா நோக்கம் என்ன

1 மருத்துவ பட்டதரிகள் டாக்டராக தொழில்புரிய தகுதி தேர்வி தேர்ச்சி பெற வேண்டும்
2 கிராமங்களில் இரண்டு ஆண்டுகள் தங்கி மருத்துவ சேவை செய்ய வேண்டும்

3 அரசு மருத்துவமணையில் 6 வருடங்கள் சேவை செய்ய வேண்டும்.
4 அரசு மருத்துவ மணையில் குறைந்த பட்ச சேவைகள் அனைத்தும் செய்து ரெக்கார்டுகள் வைத்திருக்க வேண்டும்

விடை: 1 மருத்துவ பட்டதாரிகள் டாக்டராக தொழில்புரிய தகுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விளக்கம் : மருத்துவ பட்டதாரிகள் டாக்டராக தொழில்புரிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்னும் மசோதாவானது இந்திய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கி அதன் கீழ் 4 அமைப்பை கொண்டு வந்து இளங்கலை, முதுகலை படிப்புகளை நடத்தவும் மருத்துவ கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்யவும் உதவி புரியும்.

 

7 நண்பன் என்னும் செயலியை அறிமுக செய்துள்ள வங்கி எது

1 இந்தியன் வங்கி

2 ஸ்டேட் பேங் ஆப் இந்தியா
3 ஹெச்டிஎப்சி

4 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

விடை: 4 இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

விளக்கம் : நண்பன் என்னு செயலி மூலம் வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு உடனடி ஆதரவு அளிக்க இந்த திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளது. 24 மணிநேரமும் வாடிக்கையாளர்கள் வங்கியுடன் 24 மணி நேரமும் தொடர்பில் இருப்பார். இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் புகார்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

 

8 முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு திட்டத்தின் நோக்கம் என்ன

1 முஸ்லீம் மதத்தில் பெண்களுக்கு விவகாரத்து அளிக்க பின்ப்பற்றப்படும் தலாக் -ஏ- பிட்டாத் அல்லது முத்தலாக் நடைமுறையை தடைசெய்யும் முறை ஆகும்.
2 ஆண்கள் பல திருமணங்கள் செய்து கொள்ள அனுமதி வழங்குதல்

3 திருமண பந்தம் முறித்தல் திட்டம்

விடை: 1. முஸ்லீம் மதத்தில் பெண்களுக்கு விவகாரத்து அளிக்க பின்ப்பற்றப்படும் தலாக் -ஏ- பிட்டாத் அல்லது முத்தலாக் நடைமுறையை தடைசெய்யும் முறை ஆகும்.

விளக்கம் : முத்தலாக் நடைமுறை மூலம் விவகாரத்து கொடுப்பது சட்டவிரோதம் மற்றும் செல்லாது அதை கடைப்பிடிக்கும் கணவருக்கு 3 ஆண்டுகம் சிறை தண்டனை அபராதம் விதிக்கப்படும்.

 

8 ரயில்-2018 திட்டத்தின் தகவலகள் யாவை

1 ரயில் பயணம் குறித்து அறிவிக்கவும்
2 ரயில் பயணங்களை எளிதாக்க
3 ரெயில்வே அமைச்சகம் ரெயில்- 2018 என்ற திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.

விடை: 3 ரெயில்வே அமைச்சகம் ரெயில்- 2018 என்ற திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.

விளக்கம்:
ரெயில்வே அமைச்சகம் ரெயில்- 2018 என்ற திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. மணிக்கு 160 கிமீ வேகத்தில் செல்லும் அதிநவீன ரயில் பெட்டிகளை தயாரிக்கும் திட்டமே ரயில் 2018 என்று அழைக்கப்படுகின்றது.

 

9. ட்ரோகோமா நோய் இல்லாத நாடாக அறிவிக்கப்பட்ட நாடு எது

1 பாகிஸ்தான்
2 சீனா
3 இந்தியா
4 ரஷ்யா

விடை: 3. இந்தியா

விளக்கம் :

இந்தியா கண் தொற்றுநோயான ட்ரோகோமா பாதிப்பு இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சகத்தால் 2014 முதல் 2017 அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

 

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான கேள்வி பதில்கள்

English summary
here article tells about tnpsc questions for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia