டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு வெற்றி பெற படியுங்கள்

Posted By:

தமிழ்நாடு தேர்வாணையத்தின் போட்டி தேர்வுக்கான அறிவிப்புக்காக காத்திருக்கும் அனைவரும் பொதுஅறிவு கேள்வி பதில்களை படியுங்கள் இன்று பொதுஅறிவு பகுதியில் தென்னிந்திய வரலாறு பகுதிகளிலிருந்து கேள்விகளை தொகுத்துள்ளோம். நனறாக படிக்கவும் நிறைய மாற்றங்களை கொண்டு நடக்கும் டிஎன்பிஎஸ்சி தேர்வில் கேள்விகளின் போக்கு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். தேர்வர்கள் அனைத்திற்கும் தயாராக வேண்டும்.

போட்டி தேர்வுக்கு படிக்கும் பொழுது பொதுஅறிவு கேள்வி பதிலுக்கு விடையளிக்கவும்

தேர்வர்களுக்கு தென்னிந்திய வரலாறு குறித்து அறிந்து கொள்ளவும் தேர்வுக்கும் படிக்கவும் உதவிகரமாக இருக்கும்.

1 பல்லவர்களின் தலைநகரம்

விடை: காஞ்சிபுரம்

2 பிற்கால பல்லவர்களின் முதண்மையானவர்

விடை: சிம்ம விஷ்ணு

3 சிம்ம விஷ்ணு எவ்வாறு அழைக்கப்படுகிறார்

விடை: அவனி சிம்மன்

4 மகேந்திர வர்மனை தோற்கடித்த சாளுக்கிய மன்னன் பெயர் என்ன

விடை: புலிகேசி

5 பல்லவ நிர்வாகத்தின் அடிப்படை அலகு

விடை: கிராமம்

6 பல்லவர்கள் நிர்வாகத்தில் கிராமத்தை நிர்வகிக்க இருந்தது எது

விடை: ஊர்

7 முதலாம் மகேந்திர வர்மன் எழுதிய நூல்கள் யாது

விடை: மத்த விலாச பிராகசம்,பகவத் வியூகம்

8 பராவி எழுதிய நூல் எது

விடை: கீதார்ஜூனியம்

9 மாறவர்மன் சுந்தரபாண்டியனின் சிறப்பு பெயர் யாது

விடை: சோனாடு வழங்கருளிய சுந்தரபாண்டியன்

10 முத்துகுளிக்கும் பகுதியில் சிறந்து விளங்கும் பகுதி

விடை: பாண்டிய நாடு

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுவை வெல்ல குதிரைக்கு கட்டிய கடிவாளத்தை போல் நாம் நமக்குள் ஒரே குறிக்கோளில் பயணிக்க வேண்டும். கடிவாளம் அணிய வேண்டியதில்லை ஆனால் கடிவாளம் என்பதனை உங்கள் எண்ணமாக மாற்றுங்கள் அது நோக்கி பயணியுங்கள் வெற்றி பெறுவது ஒன்றே உங்கள் குறிகோளாக கொள்ள வேண்டும். அதனை என்றும் கடைப்பிடியுங்கள்  

சார்ந்த பதிவுகள்:

ஆழ்கடல் நீச்சல் தெரிந்த தேர்வர்களுக்கு பொது அறிவு சமுத்திரம் கடப்பது எளிதே !!! 

நடப்பு நிகழ்வுகள் படியுங்க போட்டி தேர்வில் போட்டு உடைங்க !! 

நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை கச்சிதமாக படியுங்கள் கனவை அடையுங்கள்

English summary
here article tell about tnpsc gk questions practice for aspirants

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia