டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்களின் தொகுப்பு படிக்கவும்

Posted By:

டிஎன்பிஎஸ்சியின் போட்டி தேர்வை எதிர்கொள்ள தேர்வர்கள் படிக்க பொதுஅறிவு தொகுப்பை தினசரி தொகுத்து வழங்குகின்ற்றோம் மாணவர்கள் அதனை பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதே கேரியர் இந்த்யாவின் விருப்பம் ஆகும். டிஎன்பிஎஸ்சியின் தொடர்ந்து நான்கு தேர்வுகள் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நான்கு தேர்வுக்கும் பொதுஅறிவு கேள்விகள் அவசியம் இதனை உணர்ந்து தேர்வர்கள் படிக்க வேண்டும்.

போட்டி தேர்வுகளின் கேள்வி பதில்களின் தொகுப்பு படிக்கவும்

1 குடியரசு தலைவர் இறந்துவிட்டால், உதவிக்குடியரசு தலைவர் இல்லாவிடில் குடியரசு தலைவராக இருப்பவர்

விடை: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி

2 இந்தியாவில் மாநில அரசுகள் கலைக்கப் பயன்படும் சட்டத்தின் பிரிவு

விடை: 356

3 இந்தியாவில் மத்திய அரசு சட்டமியற்ற முழு அதிகாரம் வழங்குவது

விடை: மத்திய மற்றும் பொது வரிசைப் பட்டியல்கள்

4 அவசரகால நிலையை பிரகடனப்படுத்த அதிகாரம் பெற்றவர்

விடை: குடியரசு தலைவர்

5 இந்தியாவின் தணிக்கைத்துறை தலைவரை நியமனம் செய்பவர்

விடை: குடியரசு தலைவர்

6 சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை நீதிபதி யார்

விடை: ஹரிலால் ஜே .கானியா

7 தலா வருமானம் கூடுகின்ற பொழுது உழைப்பில் வேளாண்மையின் பங்கு

விடை: குறைகிறது

8 மனித மூலதன ஆக்கம் என்பது

விடை: நாட்டு மக்களின் அறிவு வளர்ச்சி திறமை அதிகரிக்கும் வழி

9 இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு கீழ்க்கண்டவைகளில் எது உதவாது

விடை: மக்கள் தொகை வளர்ச்சி

10 இந்தியர்கள் தங்கள் வருமானத்தில் பெருமபாண்மையாக செலவிடுவது

விடை: உணவுக்காக

11 இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உதவாத காரணிகளில் ஒன்று

விடை: அதிக மக்கள் தொகை வளர்ச்சி

12 இந்தியாவில் பொதுத்துறையில் எஃகு ஆலைகளை நிர்வாகம் செய்யும் அமைப்பு எது

விடை: செயில்

13 இந்திய தொழிற் வளர்ச்சி வங்கி பணி துவக்கிய வருடம் எது

விடை: 1964

14 இந்திய அரசுக்கு அதிகப்படியான வருமானத்தை ஈட்டித் தருவது

விடை: சுரங்கத்தீர்வை

15 பசுமை புரட்சியின் வெற்றிக்கு காரணமானது எது

விடை: அதிக மகசூல் வித்துக்கள்

சார்ந்த பதிவுகள் :

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு நடப்பு நிகழ்வுகளின் வினா விடை தொகுப்பு படிக்கவும்

டிஎன்பிஎஸ்சி பொது அறிவு கேள்விகளை படிக்கவும் தேர்வை வெல்லவும்

English summary
here article tell about tnpsc gk questions

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia