போட்டி தேர்வில் முக்கிய வழிகாட்டியாக இருப்பது பொது அறிவு !

Posted By:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை பக்குவமாக எதிர்கொள்வோர்கள் தேர்வை வெற்றி கொள்ளலாம். நேர மேலாண்மையுடன் பாடங்களை எளிதாக படிக்க கீ நோட்ஸ் வைத்து கொள்ள வேண்டும். பாடங்களை மறக்காமல் இருக்க இணைப்பு வார்த்தையை கோர்த்து படிக்க வேண்டும் . தேர்வில் வெற்றி பெறும் குறிகோள் ஒன்றினையே வைத்து தேர்வினை எதிர்கொள்ள வேண்டும் .கொடுக்கப்பட்டுள்ள கேள்விபதில்களை தொடர்ந்து படியுங்கள்  உங்களுக்கான வெற்றியை உறுதி செய்யலாம்.

டிஎன்பிஎஸ்சி போட்டி  தேர்வில் வெற்றி பெற கேள்வி பதில்களின் தொகுப்பினை படிங்க

1 கூட்டாட்சி என்னும் கருத்து படிவத்தை எந்த நாட்டிலிருந்து இந்தியா பெற்றது

விடை: கனடா

2 கொள்கைகளின் தீர்மானத்தை உருவாக்கியவர் யார்

விடை: ஜவஹர்லால் நேரு

3 சிறப்பு பட்டங்களை இரத்து செய்வது குறித்து தெரிவிப்பது

விடை: ஷரத்து 18

4மாநில அரசுகள் அரசியலமைப்புக்கு முரணாக செயல்படுகின்றன் என்றால்

விடை: ஆர்ட்டிகள் 356ன் கீழ் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யலாம்

5 எந்த இயக்கம் வந்தே மாதரம் முழங்க விதிக்கப்பட்டது

விடை: சுதேசி இயக்கம்

6 இந்திய தேசிய எழுச்சிக்கு அடித்தளமாக விளங்கிய இடம் எது

விடை : வங்காளம்

7 வங்காளம் 1905 இல் பிரிக்கப்பட்டபின் மீண்டும் எப்போது ஒன்றிணைக்கப் பட்டது

விடை: 1911

8 தாய்மொழி பத்திரிக்கை தடைச்சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு எது

விடை: 1878

9 வங்கப் பிரிவினையை கடுமையாக எதிர்த்தவர்

விடை: சுரேந்தினாத் பானர்ஜி

10 இந்திய பணியாளர் கழகத்தை தோற்றுவித்தவர்

விடை : கோபால கிருஷண கோகலே

11 வெல்பி குழுவில் முதல் இந்திய உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் 

விடை: தாதாபாய் நௌரோஜி

12 கல்கத்தா மாநாகராட்சி சட்டத்தை கொண்டு வந்தவர் 

விடை: கர்சன் பிரபு 

சார்ந்த பதிவுகள்:

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் அச்சாணியாக நடப்பு நிகழ்வுகள் திகழ்கின்றன

போட்டி தேர்வில் வரலாற்று பகுதியை எளிதாக வசப்படுத்த படிக்க வேண்டிய குறிப்புகள்

English summary
here article tell about tnpsc gk questions
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia