ஐஏஎஸ் தேர்வில் புவியியல் மற்றும் அறிவியல் பாடங்களில் சிறப்பாக எழுத குறிப்புகள்

Posted By:

ஐஏஎஸ் தேர்வில் வெற்றிகரமான ஒரு ரிசல்ட்டினை பெற புவியியல் மற்றும் அறிவியல் பாடங்களை பற்றி தெரிந்து கொள்வோம். புவியியல் மற்றும் அறிவியல் இரண்டும் பொதுவான பாடங்கள் இதனை அடிப்படையிலிருந்து படித்தால் தான் நடப்பு நிகழ்வுகளுடன் இணைப்பு கிடைக்கும். அதன் மூலம் இந்த பாடங்களில் கேள்விக்கு எளிதாக விடை கொடுக்க முடியும்.

அறிவியல் பாடங்கள்:

அறிவியல் பாடங்களை பொருத்தவரை அடிப்படையான தகவல்கள் மற்றும் நான்கு பிரிவுகளையும் என்சிஆர்டி புத்தகங்களில் படிக்க வேண்டும். அறிவியல் குறிப்புகள், புதிய கண்டுபிடிப்புகள், நடப்பு நிகழ்வுகளை ஒத்த விலங்கியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் இணைத்து படிக்க வேண்டும்.

6 முதல் என்சிஆர்டி பாடப்புத்தகங்கள் மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 அறிவியல் பாடப்புத்தகங்கள் படியுங்கள். வினா வங்கி புத்தகங்கள் படிக்க வேண்டியது அவசியம் ஆகும். சந்தையில் அறிவியல் புத்தகங்கள் ஏராளமாக கிடைக்கும் ஆனால் அவை அனைத்தும் படிக்க வேண்டியது அவசியம் இல்ல்லை. குறிப்பிட்ட சில பதிப்பகங்களின் புத்தகங்களை மட்டும் வாங்கி படியுங்கள்.

image source

நடப்பு கண்டுபிடிப்புகள்:

அறிவியல் பாடங்களை பொருத்தவரை உள்நாட்டில் கண்டுபிடிப்புகள் மற்றும் சாதனைகள் , ராக்கெட், நீர்மூழ்கி கப்பல், விலங்கியலில் புதிய தொழில்நுடபம் போன்றவற்றை படிக்க வேண்டும். அவ்வாறு படிக்கும் பொழுது நடப்பு நிகழ்வுகள் வெற்றிகரமாக படிக்கலாம்.

விலங்கியல், தாவரவியல்:

விலங்கியல் மற்றும் தாவரவியல் பாடங்கள் பொருத்தவரை எப்பொழுதும் அடிப்படையுடன் மனித உடல் மற்றும் நோய்கள் புதிய தடுப்பு மருந்துகள், மக்களை அதிக அளவில் பாதித்த நோய் கிருமிகள், விலங்குகள்,உயிரினங்களின் தொற்று குறித்து முழுமையாக படிக்க வேண்டும்.

அறிவியல் பாடங்களை என்சிஆர்டியில் அடிப்படை பாடங்கள் முடித்தவுடன் டாடா மெக்ராகல் மற்றும் ஸ்பெக்டரம் போன்ற பதிப்பங்கங்களின் புத்தகங்களை படிக்கவும்.

ஸ்பெக்டரம் பதிப்பகத்தின் பாடங்கள் மிகுந்த உதவிகரமாக இருக்கும். அத்துடன் யூபிஎஸ்சியின் போட்டி தேர்வின் அனைத்து கேள்விகளுக்கும் எளிதாக விடையளிக்க வேண்டுமானல் தொடர்ந்து ரிவைஸிங் செய்யுங்க.

நடப்பு நிகழ்வுகளில் விலங்கியல் தாவரவியில பாடங்களில் ஏற்படும் புதிய கண்டுபிடிப்புகள் மனித உடல் குறித்த அனைத்தையும் படிங்க தேர்வில் வெற்றி பெறுங்க. ஹிந்து நாளிழதழில் வரும் அறிவியல் பகுதியை தொடர்ந்து படிக்கவும்.

யூபிஎஸ்சிக்கான மாத நாளிதழ்கள் சந்தையில் நிறைய கிடைக்கின்றன அவற்றுள் முக்கியமான இரண்டை தொடர்ந்து பின்பற்றவும்.

 

இந்தியா இயர்புக்:

இந்தியா இயர்புக் புத்தகத்தை தொடர்ந்து படிக்கவும். இந்தியா இயற்புக் மத்திய அரசினால் ஆண்டுதோறும் வெளியிடப்படும். புத்தகம் அவற்றில் அனைத்து தகவல்களும் கொடுக்கப்படும் அறிவியல் பகுதி தகவல்கள் கிடைக்க பெறலாம், அதனை தொடர்ந்து படிக்கவும். இந்தியா இயர்புக் அறிவியல் பகுதியில் புதிய அப்டேட்கள் அனைத்து தகவல்கள் கொண்டிருக்கும். இதனை படித்தால் நிச்சயம் அதிக மதிபெண்கள் கிடைக்க பெறலாம்.

புவியியல் பாடம்:

ஐஏஎஸ் கனவினை நினைவாக்க வேண்டுமெனில் தொடர்ந்து புவியியல் பாடங்கள் 6 முதல் 12 வரை என்சிஆர்டி பாடப் புத்தகங்கள் படிக்கலாம். யூபிஎஸ்சி பொருத்தவரை புவியியல் பாடம் படிக்க மேப் கைவசம் வைத்திருக்க வேண்டும்.

புவி தோற்றம், மலைகள், சமவெளிகள், பருவ காலம், மனிதன், என அனைத்து பால் வெளி அண்டங்களையும் பற்றிய தகவகள் கொண்டிருக்கும் இந்த அனைத்தையும் ஒருங்கே கொண்டது புவியியல் பாடம் அதனை படிக்க வேண்டும்.

 

வினாவங்கி:

புவியியல் பாடத்தில் வினாவங்கியை தொடர்ந்து படிக்க வேண்டும் நாட்டிலுள்ள அனைத்து தகவல்களையும் தன்னுள் கொண்டு செயல்படும் மிகப்பெரும் தகவல் பெட்டகமாக உதவுவது வினாவங்கி ஆகும். வினாவங்கியை சரியாக படிக்கும் பொழுது கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளிக்க முடியும். மேலும் ஒவ்வொரு பாடத்திலும் எவ்வாறு கேள்விகள் கேட்கப்படும் என்பதையும் கணித்து படிக்க முடியும்.

புவியியல் வளங்கள்:

நாட்டிலுள்ள காடுகள், மலைகள், பருவகாலங்கள் , சமவெளிகள், பறவைகள், வனவினங்குகள் தோற்றம், இவைகள் எந்த இடத்தில் எங்கு விளைந்தது என்பதை தெரிவிக்க வேண்டும். நாட்டிலுள்ள நீர்பாசனம் மற்றும் எந்த நிலத்தில் என்ன விளையும் மற்றும் உலோக வளங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள உதவிகரமாக இருப்பது புவியியல் பாடம் ஆகும்.

இந்திய புவியியல், உலக புவியியல் மாற்றங்கள், இயற்கை வாழிடங்கள் அனைத்தையும் கொண்ட புவியியல் பாடமானது புவி மற்றும் பாறைகள் முதல் வானிலை மாற்றம் வரை அனைத்து முக்கிய தகவல்களையும் கொண்டது.

புவியியல் பாடத்தில் சில பேக்ட்டுகள் தெரிந்து கொள்ள நமக்கு உதவிகரமாக இருப்பதுடன், புவியியல் அடிப்படை வரையறைகளை தெள்ள தெளிவாக தெரிந்து கொண்ட ஒருவருக்கு உலகத்தில் ஏற்படும் எந்த மாற்றங்களுக்கும் சரியான விளக்கம் கொடுக்க முடியும்.

அறிவியல் கேள்விகள்போல் புவியியல் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் பொழுது சிறப்பான விடை கொடுக்க தொடர்ந்து படிக்க வேண்டும். போட்டி தேர்வின் வெற்றி தேர்வர்களின் தேடல் அமைந்துள்ளது. நீங்கள் வெற்றி பெற வேண்டும் என தீர்மானித்தால் தொடர்ந்து செயல்படுங்கள், இடையில் வரும் இடையூறுகளை கடந்து செல்லுங்கள்

 

சார்ந்த பதிவுகள்:

ஐஏஎஸ் தேர்வை வெல்ல பொருளாதாரப் பாடத்தில் படிக்க வேண்டியவை அறிவோம்! 

English summary
The article tells about tips IAS

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia