சந்திப் பிழையற்ற சொற்றொடர் மற்றும் பிறமொழி சொற்களற்ற வாக்கியம் பற்றி அறிதல்.. பொது தமிழ் கேள்விகள்

Posted By:

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது தமிழ் வினா விடைகள்

1. சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்வு செய்க.

அ. பிறர் தன்னைப் புகழுங்கால் வெட்க படுதல் வேண்டும் ஆ. பிறர் தன்னை புகழுங்கால் வெட்க படுதல் வேண்டும் இ. பிறர் தன்னைப் புகழுங்கால் வெட்கப் படுதல் வேண்டும் ஈ. பிறர்த் தன்னைப் புகழுங்கால் வெட்க படுதல் வேண்டும்

(விடை : பிறர் தன்னைப் புகழுங்கால் வெட்கப் படுதல் வேண்டும்)

2. பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.

அ. மலர்த் தோட்டத்தில் சர்ப்பத்தைக் கண்டேன் ஆ. மலர்த் தோட்டத்தில் பாம்பைக் கண்டேன் இ. புஷ்ப தோட்டத்தில் சர்ப்பத்தைக் கண்டேன் ஈ. புஷ்ப தோட்டத்தில் பாம்பைக் கண்டேன்

(விடை : மலர்த் தோட்டத்தில் பாம்பைக் கண்டேன்)

சந்திப் பிழையற்ற சொற்றொடர் மற்றும் பிறமொழி சொற்களற்ற வாக்கியம் பற்றி அறிதல்..  பொது தமிழ் கேள்விகள்

3. பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.

.அ. அஞ்சலகம் சென்று தபால் கார்டு வாங்கி வா ஆ. அஞ்சலகம் சென்று கடிதம் வாங்கி வா இ. அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வாங்கி வா ஈ. அஞ்சலகம் சென்று தபால் வாங்கி வா

(விடை : அஞ்சலகம் சென்று அஞ்சலட்டை வாங்கி வா)

4. சந்திப் பிழையற்ற சொற்டொரைத் தேர்வு செய்க.

அ. திருமால் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தார் ஆ. திருமால் கோவர்த்தன மலையை குடையாகப் பிடிததார் இ. திருமால் கோவர்த்தன மலையை குடையாக பிடித்தார் ஈ. திருமால் கோவர்த்தன மலையைக் குடையாக பிடித்தார்

(விடை : திருமால் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தார்)

5. சந்திப் பிழையற்ற சொற்டொரைத் தேர்வு செய்க.

அ. தயையும் கொடையும் பிறவிப் பண்புகள் ஆகும் ஆ. தயையும் கொடையும் பிறவி பண்புகள் ஆகும் இ. தயைய்யும் கொடையும் பிறவி பண்புகள் ஆகும் ஈ. தயைய்யும் கொடையும் பிறவி பண்ப்புகள் ஆகும்

(விடை : தயையும் கொடையும் பிறவிப் பண்புகள் ஆகும்)

6. சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க.

அ. பொதுத் தேர்வுப் பாடம் திருக்குறள் ஆகும் ஆ. பொது தேர்வு பாடம் திருக்குறள் ஆகும் இ. பொதுத் தேர்வு பாடம் திருக்குறள் ஆகும் ஈ. பொது தேர்வுப் பாடம் திருக்குறள் ஆகும்.

(விடை : பொதுத் தேர்வுப் பாடம் திருக்குறள் ஆகும்)

7. பிற மொழி சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க

அ. கோயிலுக்கு கும்பாபிஷ்கம் நடைபெற்றது ஆ. கோயிலுக்கு கும்பாபிசேகம் நடைபெற்றது இ. கோயிலுக்குத் திருமுழுக்கு நடைபெற்றது ஈ. கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றது.

(விடை : கோயிலுக்கு குடமுழுக்கு நடைபெற்றது.)

8. சந்திப் பிழை இல்லாத தொடரைத் தேர்க

அ. அந்தப் பையன் சொன்னச் செய்தி நல்லது ஆ. அந்தப் பையன் சொன்ன செய்தி நல்லது இ. அந்த பையன் சொன்ன செய்தி நல்லது ஈ. அந்த பையன் சொன்னச் செய்தி நல்லது

(விடை : அந்தப்பையன் சொன்ன செய்தி நல்லது)

9. பிறமொழி சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க

அ. ஜலம் குடித்து மகிழ்ச்சி அடைந்தான் ஆ. நீர் குடித்து மகிழ்ச்சி அடைந்தான் இ. ஜலம் குடித்து சந்தோசம் அடைந்தான் ஈ. நீர் குடித்து சந்தோசம் அடைந்தான்

(விடை : நீர் குடித்து மகிழ்ச்சி அடைந்தான்)

10. மரபு பிழைகளை நீக்குக

அ. சேவல் கூப்பிட பொழுது புலர்ந்தது ஆ. சேவல் கூவ பொழுது புலர்ந்தது இ. சேவல் கத்த பொழுது புலர்ந்தது ஈ. சேவல் கொக்கரிக்க பொழுது புலர்ந்தது

(விடை : சேவல் கூவ பொழுது புலர்ந்தது)

English summary
Above mentioned General Tamil Questions are very useful for Tnpsc exam, Tet exam, Police exam, Enrance exam and other government examinations.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia