கேட் தேர்வு 2019 விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

கேட் தேர்வு என்பது இந்தியாவில் உள்ள ஐஐடி, என்ஐடி, அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட உயர்ந்த கல்வி நிறுவனங்களில் எம்.இ, எம்.டெக் படிக்க மத்திய அரசால் நடத்தப்படும் தேர்வாகும். இந்திய அறிவியல் கழகத்தில் சிவில் துறையில் மேற்படிப்புகளை படிக்கவும், இந்திய மேலாண்மை கழகத்தில் எம்.பி.ஏ படிக்கவும் இந்த தேர்வு மதிப்பெண் முக்கியப் பங்கு வகிக்கிறது. கேட் மதிப்பெண் அடிப்படியிலேயே பிஎச்சிஎல், ஐஒசிஎல், ஒஎன்ஜிசி, கேல் போன்ற நிறுவனங்களில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

 
கேட் தேர்வு 2019 விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

பெங்களூரின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயன்ஸ் கல்வி நிறுவனமும் இரண்டுக்கும் மேற்பட்ட ஐஐடிக்களும் சேர்ந்து நடத்துகின்ற இத்தேர்வில் சென்னை ஐஐடி 2019-ஆம் ஆண்டிற்கான கேட் தேர்வு தேதிகளை வெளியிட்டு விண்ணப்பங்கள் வரவேற்பப்படுகின்றன. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் இன்றுடன் (செப்டம்பர் 21, 2018) முடிவடைகிறது.

கேட் தேர்விற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை:-

கல்வித் தகுதி :

  • பொறியியல் அல்லது தொழில்நுட்பப் படிப்புகளில் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டம்
  • 4 ஆண்டுகளைக் கொண்ட அறிவியல் பட்டப்படிப்புகள்
  • முதுநிலை அறிவியல் துறையில் தேர்ச்சி

தேர்வு முறை :

  • இணையதளம் வழியான கணினித் தேர்வு அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

கட்டணம் :

  • எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.750
  • பிற பிறிவினர்களுக்கு ரூ.1500

விண்ணப்பிக்கும் முறை:

  • விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கலாம். 21-9-2018-ந் தேதி வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். gate.iitm.ac.in என்னும் அதிகாரப்பூர்வ தளத்தில் முழு விவரங்களை அறிந்து கொண்டு, விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 2018 செப்டம்பர் 21

அபராதத்துடன் விண்ணப்பிக்க : 2018 அக்டோபர் 1

தேர்வு நடைபெறும் நாட்கள் : 2019 பிப்ரவரி 2, 3, 9, 10

இத்தேர்வு குறித்த மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க கேட்-யின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கமான இந்த https://tamil.careerindia.com/ லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
GATE 2019 Registration with Normal Fee until 21 Sep: Apply Soon!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X