கேட் 2019 நுழைவுத் தேர்விற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அதனை திருத்தவும் கால அவகாசம் அளிக்கப்பட்டது.

கேட் 2019 தேர்விற்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களில் ஏதேனும் மாற்றம் இருந்தால் அதனை திருத்த அக்டோபர் 25 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பில், இன்றுடன் ஆன்லைன் விண்ணப்பத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை எனில், கேட் 2019 நுழைவு தேர்விற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
கேட் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள GOAPS இணையதளமான appsgate.iitm.ac.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும். விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய தேர்விற்கான நகரில் மாற்றம் செய்ய நவம்பர் 16ஆம் தேதி கடைசி ஆகும். இதற்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
கேட் 2019 நுழைவுத் தேர்வு பிப்ரவரி 2, 3, 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. இதற்கான தேர்வு அனுமதி அட்டை 2019 ஜனவரி 4ம் தேதியன்று வெளியிடப்படும்.


Click it and Unblock the Notifications












