எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்கள்: ஏப் 15-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

Posted By:

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான பொதுத் தேர்வுக்கு ஏப்ரல் 15 முதல் 21 வரை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செவ்வாய்க் கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2015-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தனித் தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு மே 1-ஆம் தேதியன்று பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்த தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்கள்: ஏப் 15-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் http://tndge.in/ என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையங்களுக்குச் சென்று ஆன்-லைன் மூலம் தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களை ஏப்ரல் 15 முதல் 21 வரை பதிவு செய்துகொள்ளலாம்.

தேர்வுக் கட்டணம் ரூ.125-ம், பதிவுக் கட்டணமாக கூடுதலாக ரூ.50 செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை பணமாகச் செலுத்த வேண்டும்.

இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச கல்வித் தகுதி எதுவும் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் 8-ஆம் வகுப்பிற்குக் கீழ் படித்து இடையில் நின்றவர்களும் தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம். ஆனால், பன்னிரண்டரை வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.

ஆன்-லைன் விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றின் ஏதேனும் ஒரு நகலை ஆன்-லைன் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

English summary
Private students can apply online for 8th standard public examinations from April 15th.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia