பருவத் தேர்வுக்கான மறு தேதிகளை அறிவித்தது சட்டப் பல்கலைக்கழகம்

Posted By:

சென்னை: மழை, வெள்ளப் பாதிப்பின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பருவத் தேர்வுகளுக்கான மறு தேதிகளை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தற்போது அறிவித்துள்ளது.

கடும் வெள்ளப் பாதிப்பின் காரணமாக பிற பல்கலைக்கழகங்களைப் போல் சட்டப் பல்கலைக்கழகமும் அதன் கீழ் இயங்கும் இணைப்புக் கல்லூரிகளுக்கான பருவத் தேர்வுகளை ஒத்திவைத்தது.

பருவத் தேர்வுக்கான மறு தேதிகளை அறிவித்தது சட்டப் பல்கலைக்கழகம்

பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் ஆற்றல்சார் சட்டப் பள்ளிக்கான 3 ஆண்டு ஹானர்ஸ், 5 ஆண்டு ஹானர்ஸ் சட்டப் படிப்புத் தேர்வுகள், இணைப்புக் கல்லூரிகளுக்கான 3 ஆண்டு, 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான தேர்வுகள் என அனைத்துத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

இந்தத் தேர்வுகளுக்கான மறு தேதிகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் இந்த விவரங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia